Show all

சமூகவளைதளத்தில் கணவரின் பிணத்துடன் இணைந்து மனைவி...

இறந்துபோன கணவரின் பிணத்துடன் இணைந்து புகைப்படம் எடுத்து அதனைச் சமூகவளைதளத்தில் வெளியிட்டுள்ள மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் சின்சினாட்டி நகரத்தை சேர்ந்த மைக்செட்டில்ஸ், ஈவா ஹாலந்த் தம்பதியினருக்கு லுகாஸ் மற்றும் அவா என்று இரு குழந்தைகள் உள்ளனர்.

11 ஆண்டுகள் சந்தோஷமாக வாழ்ந்த இந்த தம்பதியினரின் வாழ்வில் திடீரென அதிர்ச்சியான சம்பவம் ஒன்று நிகழ்ந்தது.

திருமணத்திற்கு முன்பே ஹெராயின் பழக்கத்துக்கு அடிமையான மைக் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் 2ம் திகதி உயிரிழந்தார்.

இவரின் மரணம் அந்தக் குடும்பத்தைச் சோகத்தில் ஆழ்த்தியது,

இந்நிலையில் தனது குழந்தைகளோடு இணைந்து கணவரின் உடலுடன் சிரித்துக்கொண்டே புகைப்படம் எடுத்துக்கொண்ட ஈவா அதனை சமூக வளைதளமான பேஸ்புக் மற்றும் இன்ஸ்டகிராமில் பதிவேற்றம் செய்து அதனுடன் ஒரு கடிதத்தையும் வெளியிட்டுள்ளார்.

அந்த கடிதத்தில், ஹெராயின் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் அதிலிருந்து விடுபட இந்தப் புகைப்படம் உதவும்.

என் குழந்தைகளுக்கு நல்ல தந்தையாகவும், பெற்றோருக்கு நல்ல மகனாகவும், எனக்கு நல்ல கணவனாகவும் இருந்த அவர் இன்று உயிருடன் இல்லை.

ஹெராயின் எனும் போதைப்பழக்கம் எங்கள் வாழ்வில் வீசிய வசந்தத்தை அழித்துவிட்டது, இந்த பழக்கத்திற்கு அடிமையான எனது கணவர் எவ்வளவு சிகிச்சைகள் மேற்கொண்டும் அவரால் உயிர்பிழைக்க முடியவில்லை.

எனவே இந்தப் புகைப்படத்தை பார்த்தாவது, ஹெராயின் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் நிச்சயமாகத் திருந்த வேண்டும் என்ற நோக்கத்தில் இந்தக் கடிதத்தை எழுதியுள்ளேன் என்று கூறியுள்ளார்.

இந்தக் கடிதம் 2 லட்சத்து 50 ஆயிரம் தடவைக்கு மேல் பகிரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.