Show all

வழக்கறிஞர்கள் மாணவர்கள் ஆகியோர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் தமிழை வழக்காடும் மொழியாக அறிவிக்க வேண்டும் என்று தமிழக வழக்கறிஞர்கள் நீண்ட காலமாக  போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை உயர;நீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன்கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் இன்று நீதிமன்ற  அறைக்குள் வந்தனர். அப்போது வழக்கறிஞர;கள் சட்டக்கல்லூரி மாணவர்கள் 15 பேர், வாயில் கருப்புத் துணியைக் கட்டி கொண்டும், கையில் பதாகைகளைப் பிடித்து  கொண்டும் நின்றனர்.

பதாகைகளில் தமிழில் வழக்காடுவது தமிழர்களின் உரிமை. இதை பறிக்கக் கூடாது என்றும் வழக்காடும் மொழியாக தமிழை உடனடியாக  அறிவிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.

இதைக் கண்டு தலைமை நீதிபதி அதிர்ச்சியடைந்தார். ஊடனடியக நீதிமன்றத் தலைமை பதிவாளர், நிர்வாகப்  பதிவாளர் ஆகியோரை அழைத்து, வாயில் துணி கட்டி நீதிமன்ற அறையில் அமர்ந்திருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இதையடுத்து கூடுதல் கமிஷனர் ரவிகுமார், இணை கமிஷனர் தினகரன், துணை கமிஷனர் சுதாகர் ஆகியோர் போலீசாருடன் நீதிமன்றத்திற்கு வந்தனர்.

இந்தச்  சம்பவம் குறித்து தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தனர். இந்த நீதிமன்றத்திற்கு தகுந்த பாதுகாப்பை போலீசாரால் வழங்க முடியவில்லை. எனவே, நீதிமன்றத்திற்கு மத்திய தொழில் பாதுகாப்பு படை போலீசாரை கொண்டு  ஒருங்கிணைந்த பாதுகாப்பை ஏன் வழங்க கூடாது?

என்பதற்கு மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும். இதை வரும் 18ம் தேதி தெரிவிக்க வேண்டும்.  அன்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என்று உத்தரவிட்டார்கள்.

அதேநேரம், வழக்கறிஞர்கள் மாணவர்கள் ஆகியோர் தொடர்ந்து போராட்டத்தில்  ஈடுபட்டு வருகின்றனர்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.