Show all

இலங்கை அரசுடன் இணைந்து பணியாற்றவுள்ளதாக அமெரிக்க அறிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் அலுவலகத்தினால் இலங்கை தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணை அறிக்கையில் கண்டறிப்பட்டுள்ள முக்கியமான விடயங்கள் குறித்து நடவடிக்கையெடுப்பதற்கு இலங்கை அரசுடன் இணைந்து பணியாற்றவுள்ளதாக அமெரிக்க அறிவித்துள்ளது.

அத்தோடு இலங்கை தொடர்பான விசாரணை அறிக்கை வெளியீட்டை தாம் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்திருப்பதாகவும் சர்வதேச அமைப்புக்கள் சார் விவகாரம் தொடர்பான அமெரிக்க பணியகத்தைச் சேர்ந்த பிரதி இராஜாங்க அமைச்சர் எரின் எம். பார்க்லே தெரிவித்துள்ளார்.

ஜெனிவாவில் நேற்று ஆரம்பமான ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 30ஆவது கூட்டத் தொடரில், உரையாற்றிய அமெரிக்கப் பிரதிநிதிகள் குழுவின் தலைவர் எரின் எம். பார்க்லே அறிவித்துள்ளார்.

இலங்கையில் பொறுப்புக்கூறல் குறித்த செயல்முறைகள் தொடர்பாக இலங்கை அரசுடன் இணைந்து அதன் இணக்கப்பாட்டுடனும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் ஆதரவுடனும் தீர்மானம் ஒன்றைக் கொண்டு வரும் பணியில் ஈடுபடவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.