Show all

கூடங்குளம் அணுமின்நிலைய இரண்டாவது அணு உலையில் மின்உற்பத்தி தொடங்கியது

 

     கூடங்குளம் அணுமின்நிலையத்தின் இரண்டாவது அணு உலையில் இன்று மாலை முதல் மின்உற்பத்தி தொடங்கியது. திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் ரஷ்ய நாட்டின் தொழிற்நுட்ப உதவியுடன் தலா ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி திறன் கொண்ட இரண்டு அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

முதலாவது அணு உலை கடந்த 2013ம் ஆண்டு ஜூலை 13ம் தேதி கிரிட்டிகாலிட்டி துவங்கியது. 2013 அக்டோபர் 22 முதல் மின்உற்பத்தி தென்னக மின்தொகுப்பிற்கு அனுப்பினர். 2014 டிசம்பர் 31ல் வணிகரீதியிலான மின்உற்பத்தி மேற்கொள்ள தொடங்கியது. அவ்வப்போது ஏற்படும் சிறு சிறு பழுதுகள் சரிபார்க்கப்பட்டு மின்உற்பத்தி தொடர்ந்து நடக்கிறது. தற்போது முழுஅளவான ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.