Show all

ஊடகச் சுதந்திரத் தரவரிசைப் பட்டியலில் இந்தியாவுக்கு 133வது இடம்

சர்வதேச அளவில் ஊடக சுதந்திரம் தொடர்பான தரவரிசைப் பட்டியலில் இந்தியாவுக்கு 133-வது இடம் கிடைத்துள்ளது. மொத்தம் 180 நாடுகள் கொண்ட பட்டியலில் இந்தியா 133-வது இடத்தை பிடித்துள்ளது. சர்வதேச பத்திரிகை சுதந்திரம் உள்ள நாடுகளின் தரவரிசைப் பட்டியலை ஆர்.எஸ்.எப் என்னும் எல்லைகள் அற்ற செய்தியாளர்கள் அமைப்பு வெளியிட்டுள்ளது. ஆர்.எஸ்.எப் அமைப்பின் இந்தத் தரவரிசைப் பட்டியலில் பின்லாந்து தொடர்ந்து 6-வது ஆண்டாக முதலிடத்தை பெற்றுள்ளது. இந்தப் பட்டியலில் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களில் முறையே நெதர்லாந்து, நார்வே நாடுகள் உள்ளன. பத்திரிகை சுதந்திரமிக்க நாடுகள் பட்டியலில் அமெரிக்கா 44-வது இடத்திலும், ரஷ்யா 148-வது இடத்திலும் உள்ளன.

 

கடந்த ஆண்டிற்கான தரவரிசைப்பட்டியலில் 136-வது இடத்தில் இருந்த இந்தியா தற்போது 133-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. பட்டியலுடன் ஆர்.எஸ்.எப் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் பத்திரிகையாளர்களும், வலைபதிவர்களும் எளிதில் மத அமைப்புகளால் தாக்க்கப்படும் சூழல் உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. மேலும் இந்தியாவில் பத்திரிகையாளர்களை பாதுகாக்க போதிய வழிவகைகள் செயல்படுத்தப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பதற்றமான பகுதியாக கருதப்படும் காஷ்மீர் போன்ற மாநிலங்களைப் பத்திரிகையாளர்கள் எளிதில் அணுக முடிவதில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.