Show all

கடுப்படிப்பால் கடம்பூர் இராசுவைக் கவிஞர் ஆக்கிய தமிழிசை

23,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: தன் மகளுக்கு அழகாகத்தான் பெயர் வைத்தார் அந்த மாமனிதர் குமரிஅனந்தன், தமிழிசையென்று. ஆனால் இந்த அம்மணி வாயைத் திறந்தாலே, கொக்கரிப்பு, ஓலம், அறைகூவல், அடாவடி. கடுப்படிப்புதான். ஆனால் அந்தக் கடுப்படிப்பே, ஓர் அப்பாவி மனிதரைக் கவிதை பேச வைத்திருக்கிறது. சரசுவதி சபதம் சிவாஜியை கவிஞர் ஆக்கிய கேஆர்.விஜயா போல. அந்தக் கவிஞரின் கவிதை வரிகள்: 'இயற்கையாக மலர்ந்தால் தான் மலருக்கு நல்லது' என்பதே. 

தொழில்நுட்ப ரீதியில் தாமரை மலரும் என்ற தமிழக பாஜக தலைவர் தமிழிசையின் கருத்துக்கு, அமைச்சர் கடம்பூர் இராசு அளித்த பதில்தான் இந்தக் கவிதை வரிகள்.

தொழில்நுட்ப ரீதியில் தாமரை மலரும் என்ற தமிழக பாஜக தலைவர் தமிழிசையின் கருத்துக்கு, அமைச்சர் கடம்பூர் இராசு பதிலளித்துள்ளார். கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'இயற்கையாக மலர்ந்தால் தான் மலருக்கு மரியாதை' என்று இரட்டுற மொழிதல் அணியில் ஒற்றைவரி  கவிதை வாசித்துள்ளார்

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,69,996.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.