Show all

எதிர்நிலையில் தமிழக அரசு! ஆடுதாண்டும் காவிரியில் அணைகட்டும் முயற்சியில் கருநாடகம்; இன்று கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்

17,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஆடுதாண்டும் காவிரியில் அணை கட்ட நடுவண் அரசு அனுமதி அளித்துள்ள நிலையில் இன்று காவிரி மேலாண்மை ஆணையம் கூடுகிறது. 

காவிரி ஆற்றின் குறுக்கே ஆடுதாண்டும் காவிரியில் ரூ.5900 கோடியில் புதிதாக அணை கட்ட கர்நாடகம் முயற்சித்து வருகிறது. இதற்கான அறிக்கையை நடுவண் நீர்வள ஆணையத்திடம் கர்நாடக அரசு பதிகை செய்தது. இந்த அறிக்கையை நடுவண் நீர்வள ஆணையம் ஏற்றுக் கொண்டது. இதையடுத்து விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து அளிக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது. 

ஆடுதாண்டும் காவிரியில் அணை கட்டுவதற்கான சாத்தியக்கூறு அறிக்கைக்கு நடுவண் அரசு ஒப்புதல் அளித்ததை எதிர்த்து இந்தியத் தலைமை அமைச்சர் மோடிக்கு தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதினார். மேலும் இந்த அனுமதிக்கு எதிராக தமிழக அரசு சார்பில் உச்ச அறங்கூற்றுமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டு உள்ளது. 

இந்தச் சூழலில் காவிரி மேலாண்மை ஆணையம் டெல்லியில் இன்று கூடுகிறது. ஆணைய தலைவர் மசூத் உசேன் தலைமையில் கூட்டம் நடைபெறுகிறது. ஆறு மாதங்களுக்கு முன்பு டெல்லியில் முதல் கூட்டம் நடைபெற்று தற்போது மாதந்தோறும் நடைபெறுகிறது. ஆடுதாண்டும் காவிரியில் அணை கட்ட ஒப்புதல் அளித்த பிறகு இது முதல் கூட்டம் என்பதால் இந்த கூட்டத்தில் புதிய அணை குறித்த பிரச்சினையை தமிழக அரசு எழுப்பும்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்;டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,69,990.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.