Show all

நீதிபதி - டிக்கெட் பரிசோதகர் இடையே ஏற்பட்ட மோதல் பயணிகள் அவதி

எர்ணாகுளம் விரைவு ரயிலில் நீதிபதி - டிக்கெட் பரிசோதகர் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக திருச்சியில் சுமார் ஒருமணி நேரம் ரயில் நிறுத்திவைக்கப்பட்டது.

காரைக்காலிலிருந்து கேரள மாநிலம் எர்ணாக்குளத்துக்கு விரைவு ரயில் வௌ;ளிக்கிழமை மாலை புறப்பட்டது. அதில் ஏ1 பெட்டியில் நீலகிரியைச் சேர்ந்த நீதிபதி சுரேஷ்விஸ்வநாத் பயணித்துள்ளார். அவரிடம் டிக்கெட் பரிசோதகர் ஏ. வெங்கடேஷ் அடையாள அட்டையைக் காண்பிக்குமாறு கூறியபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்த தகவலின் பேரில், டிக்கெட் பரிசோதகர்கள் திருச்சி ரயில் நிலையத்தில் குவிந்தனர். ரயில் திருச்சி வந்து புறப்படும் வேளையில், அபாயச்சங்கிலியை பிடித்து இழுத்து ரயில் நிறுத்தப்பட்டது. நீதிபதி வருத்தம் தெரிவித்தால்தான் ரயிலை செல்ல அனுமதிப்போம் எனக் கூறி, டிக்கெட் பரிசோதகர் சங்கத்தினர் ரயில் நிலையத்தில் கூடி முழக்கம் எழுப்பினர். இதற்கிடையே, காவல்துறையினர் நீதிபதியை மாற்று ஏற்பாடு மூலம் கோவைக்கு அனுப்பி வைத்தனர். இந்த களேபரங்களால் இரவு 8.10 மணிக்கு புறப்படவேண்டிய எர்ணாக்குளம் விரைவு ரயில் சுமார் 1.30 மணி நேரம் தாமதமாக (9.35 மணியளவில்) புறப்பட்டுச் சென்றது. இதுகுறித்து இருதரப்பினரும் காவல்துறைக்கு புகார் ஏதும் அளிக்கவில்லை. ரயில் புறப்படுவதில் தாமதமானதால் பயணிகள் அவதிக்குள்ளாயினர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.