Show all

வாக்கு இயந்திரத்தில் முறைகேடா? பதிவான இரண்டாவது குற்றச்சாட்டு

இன்று காலையில், எந்தப் பொத்தானை அழுத்தினாலும் இரட்டை இலைக்கு வாக்கு வருவதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வருகின்றன என்று விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்த குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் 
தற்போது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் போட்டியிடும் நவாஸ்கனி, எந்தப் பொத்தானை தொட்டாலும் தாமரைக்கு வாக்கு பதிவாகிறது! என்ற குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
 05,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் திமுகவின் கூட்டணியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் வேட்பாளர் நிறுத்தப்பட்டுள்ளார். ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளராக நயினார் நாகேந்திரன் போட்டியிடுகிறார்.
இந்நிலையில், ராமநாதபுரம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் போட்டியிடும் நவாஸ்கனி சாயல்குடியில் உள்ள வாக்கு சாவடியை பார்வையிட்டார்.
பின்னர், பேட்டியளித்த அவர், சிக்கல் பகுதிகளில் உள்ள வாக்கு மையங்களில் எந்தச் சின்னத்தை தேர்வு செய்தாலும் அதில் தாமரை சின்னத்திற்கே வாக்கு பதிவதாக தெரிவித்தார்.
அதன் பின், தொடர்ந்து அதிகாரிகளிடம் முறையிட்டு கேட்ட பின் அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுப்பதாக தெரிவித்ததாகவும் வேட்பாளர் நவாஸ்கனி தெரிவித்துள்ளார். 
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,126.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.