Show all

தமிழிசை சவுந்தரராஜன்தானே? அவர் ஒரு விஞ்ஞானி! கமல்ஹாசன் கோபம்

08,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: தஞ்சை மாவட்டத்தில் கஜா புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்த மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் இன்று திருச்சி வந்து விமானம் மூலம் சென்னை புறப்பட்டு சென்றார்.

முன்னதாக அவர் திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: கஜா புயல் பாதித்த கழிமுக மாவட்டங்களில் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். அரசு எந்திரம் இன்னும் முடுக்கி விடப்பட வேண்டும். நான் சொல்வதெல்லாம் அரசின் காதுக்கு எட்டுமா? என்று தெரியவில்லை. மிகச்சிறிய 10-க்கு 10 அறையில் 150-க்கும் மேற்பட்டோர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இது நல்லதல்ல, ஆரோக்கியமானதல்ல. இன்று பெய்துள்ள மழை மேலும் பொதுமக்களை பாதிக்க செய்யும். எனவே தேவையான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்.
தஞ்சை மாவட்டத்தில் புயல் பாதிப்பு பகுதிகளை பார்வையிட சென்ற போது பல்வேறு இடங்களில் பொது மக்கள் பலர் முழக்கம் எழுப்பி சாலை மறியலில் ஈடுபட்டுகொண்டிருந்தனர். நான் செல்லும் போது அவர்கள், நாங்கள் எதற்காக செல்கிறோம் என்பதை அறிந்து வழிவிட்டார்கள். இது அவர்களின் பெருந்தன்மையை காட்டுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த அரசு மக்களை ஏழ்மையாக ஆக்கி வருகிறது என்று நேற்று நீங்கள் பேட்டியளித்தீர்கள். இதற்கு பதில் அளித்துள்ள பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அவர் ஆராய்ச்சி செய்து சொல்லட்டும் என்று கூறியிருக்கிறாரே? என்று கேள்வி எழுப்பினர் ஒரு செய்தியாளர். அதற்கு பதில் அளித்த கமல்ஹாசன், தமிழிசை சவுந்தரராஜன் ஒரு விஞ்ஞானி. நான் ஒரு சமூக சேவகர் என்று கூறி விட்டு சென்றார்.

இணைய ஆர்வலர்களும் சரி, தமிழக அரசியல் தலைவர்களும் சரி, தமிழிசை சவுந்தரராஜன், எச்.ராஜா உள்ளிட்ட தமிழக பாஜக தலைவர்களைக் கோமளிகளாகவே கருதுகிறார்கள ; பதிவுகளிலும், பேச்சுகளிலும் அவ்வாறே வெளிப்படுத்தவும் செய்கிறார்கள். 

பாஜக வரவுக்கு முந்தைய தமிழகத்தில், திமுகவிலோ, அதிமுகவிலோ இது போன்றவர்கள் ஒருவரைக் கூட காண இயலாது. பெரியார், அண்ணா, கலைஞர், எம்ஜியார், வைகோ, விடுதலை விரும்பி, நாஞ்சில் மனோகரன், நெடுஞ்செழியன், அனந்தநாயகி, ஈவிகே சம்பத் என்று பெயரை உச்சரித்தாலே உடம்பெல்லாம் அதிரும்.

திமுக இன்னும் கோமாளிகளை உள்வாங்கிக் கொள்ளாத நிலையில், அதிமுக நிறையவே கோமாளிகளை உள்வாங்கிக் கொண்டு விட்டது. மீண்டும் அந்த, 'பெரியார், அண்ணா, கலைஞர், எம்ஜியார், வைகோ, விடுதலை விரும்பி, நாஞ்சில் மனோகரன், நெடுஞ்செழியன், அனந்தநாயகி, ஈவிகே சம்பத்' காலம் வருமா? வராமலே போய்விடுமா என்பது தமிழர்கள் ஏக்கமாக இருக்கிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,981.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.