Show all

தமிழகத்தில் பாஜக வேட்பாளர் தேர்வு வெற்றிகரமானதா!

07,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பாஜகவின் நிலைமை தமிழகத்தில் நோட்டாவோடு மட்டுமே போட்டி என்று மதிக்கப் படுகிற நிலையில், இன்று வெளியான பாஜக வேட்பாளர் பட்டியல் தமிழகத்தைப் பொறுத்தவரை தரமானதா என்பது தமிழ் மக்களின் ஆர்வத் தேடல் ஆகும்.

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் பட்டியல் இன்று வெளியானது. பல மாநிலங்களில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலுடன் தமிழகப் பட்டியலும் வெளியானது.

மக்களவைத் தேர்தலுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. மோடி, அமித் ஷா, ராஜ்நாத்சிங் உள்ளிட்ட 184 வேட்பாளர்களின் பல மாநிலப் பட்டியலை தேர்தல் குழு செயலர் ஜே.பி.நட்டா வெளியிட்டார்.

தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் பாஜக இணைந்து போட்டியிடுகிறது. இதில் பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கோவை, சிவகங்கை, தூத்துக்குடி, ராமநாதபுரம், கன்னியாகுமரி ஆகியன அந்த 5 தொகுதிகள். 1.தூத்துக்குடி தொகுதியில் திமுக வேட்பாளர் கனிமொழியை எதிர்த்து பாஜக வேட்பாளர் தமிழிசை போட்டியிடுகிறார். ஸ்டெர்லைட்டுக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் 13 உயிர்பலி அச்சத்தில் அந்தத் தொகுயை அதிமுக கழட்டி விட்டு விட்டதாகப் பேசப்படுகிறது. பாஜகவிற்கு ஆதரவான அதிமுக கருத்துப்பரப்புதல் எதிர்வினையாற்றவே செய்யும். ஆக மொத்தம் பாஜக வேட்பாளர் தமிழிசையின் தோல்வி 100 விழுக்காடு உறுதி என்று சொல்லப் படுகிறது.

2.கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை எதிர்த்து நடுவண் அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் நிறுத்தப் பட்டுள்ளார். 

3.சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை எதிர்த்து எச்.இராஜா வேட்பாளராக நிறுத்தப் பட்டுள்ளார்.

4.கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை எதிர்த்து பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் நிறுத்தப் பட்டுள்ளார்.

5.இராமநாதபுரத்தில் முஸ்லீம் லீக்கை எதிர்த்து களம் காண்கிறது பாஜக நயினார் நாகேந்திரனை வேட்பாளராக நிறுத்தி.

திமுக- பாஜகவை எதிர்த்து நின்று, தமிழகத்தின் எந்தத் தொகுதியிலும் மிகமிக எளிதாக வெல்ல முடியும் என்ற நிலையில், பாஜக போட்டியிடும் ஐந்து தொகுதிகளில் ஒன்றில் மட்டும் திமுக தனது வேட்பாளரை நிறுத்தி விட்டு, மற்ற நான்கு தொகுதிகளிலும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களையே களம் இறக்கியிருப்பதில், பாஜகவை வெல்ல எங்கள் கூட்டணிக் கட்சிகளே போதும் என்ற தெனாவெட்டு தெரிகிறது. ஆகா பாஜக போட்டியிடும் ஐந்து தொகுதிகளிலும் பாஜக தோல்வியே காணும் என்று கருதப் படுகிறது. ஆதுவும் தூத்துக்குடியில் வைப்புத்தொகையை பாஜக இழப்பது உறுதியென்றும் பேசப்படுகிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,098.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.