Show all

சர்வதேச முதலீட்டாளர் மாநாடு மூலம் தமிழகத்துக்கு ரூ.2.42 லட்சம் கோடி முதலீடு

சர்வதேச முதலீட்டாளர் மாநாடு மூலம் தமிழகத்துக்கு ரூ.2.42 லட்சம் கோடி முதலீடு பெறப்பட்டுள்ளதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்ற சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டின் நிறைவு விழாவில் முதல்வர் ஜெயலலிதா பங்கேற்று நிறைவுரையாற்றினார்.

அப்போது, சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு மட்டும் 16 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு பெறப்பட்டுள்ளது. 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளது.

2014ம் ஆண்டு மார்ச் மாதம் தாக்கல் செய்த பட்ஜெட் உரையில் இந்த மாநாடு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த மாநாடு குறித்த ஏற்பாடுகளை நான் தனிப்பட்ட முறையில் கண்காணித்தேன்.

இந்த மாநாடு  மூலம் தமிழகத்துக்கு ரூ.2.42 லட்சம் கோடி முதலீடு பெறப்பட்டுள்ளது.

சென்னையில் நிமிடம் ஒன்றுக்கு 3 கார்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. இன்று பெறப்பட்டுள்ள முதலீடு மூலம் உலகின் மிகப்பெரிய கார் உற்பத்தி மையமாக சென்னை உருவாகும் என்று கூறினார்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.