Show all

மொத்ததில் கேப்டன் விஜயகாந்த் கூட்டணி மீது நிறைய எதிர்பார்ப்பு இருக்கிறது

தமிழக அரசியல் களத்தில் விஜயகாந்த் தம்முடன் தாம் கூட்டணி அமைப்பார் என்று ஒவ்வொருவரும் எதிர்பார்த்திருந்த நிலையில்,

யாரும் எதிர்பாராத வகையில் மக்கள் நலக்கூட்டணியில் இணைந்து முதல்வர் வேட்பாளராகவும் ஆகியுள்ளார்.

50 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் உள்ள வைகோவும் ஒருபடி மேலே சென்று, ‘இன்று முதல் கேப்டன் விஜயகாந்த் அணி’ என்று அழைக்கப்படும் என்றார்.

 

குறைந்தபட்ச செயல்திட்டங்களை எல்லாம் தீட்டி மக்கள் நலக்கூட்டணி வேகமாக வளர்ந்து வருகிறது என்று சொன்ன அதன் தலைவர்கள் எல்லாம் ‘விஜயகாந்த் அணி என்றும், முதல்வர் வேட்பாளர்’ என்றும் விஜயகாந்தை புகழ்ந்து தள்ளினர்.

 

இதனால் இதுவரை விஜயகாந்தை எதிர்பார்த்திருந்தவர்கள் ஏமாற்றத்தின் உச்சிக்கே சென்று அழுது புலம்பி ஆராற்றத் தொடங்கியுள்ளனர்

நடுவண் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்,

‘மாப்பிள்ளை அவரு.. ஆனா சட்டை என்னுது’ என்ற படையப்பா பட காமெடியை சொல்லி விமர்சித்தார்.

தமிழிசை சவுந்திரராஜனோ,

‘சவலைக் குழந்தையுடன் சேர்ந்து விஜயகாந்தால் ஓட முடியாது. அவர் தனது அரசியல் வாழ்க்கையை வீணடித்துவிட்டார்’ என்றார்.

அன்புமணி ராமதாசோ,

‘தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளுடன் விஜயகாந்த் பேசிவிட்டார். மக்கள் நலக்கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்பட மாட்டாது. அவ்வாறு அறிவித்தால் அது ஜனநாயக மரபுக்கு எதிரானது என கூறிவிட்டு, இப்போது தமிழக மக்களின் பிரச்னைகள் என்னவென்றே தெரியாத விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக அறிவித்துள்ளனர்’ என்றார்.

 

காந்திய மக்கள் இயக்க நிறுவனர் தலைவர் தமிழருவி மணியனோ,

‘விஜயகாந்த் முதுகுக்கு பின்னால் அரசியல் நடத்துவது என்ற நிலைப்பாட்டால் வைகோ தனக்கான வீழ்ச்சியை தானாகவே உருவாக்கிக் கொண்டார்’ என்றார். மொத்ததில் கேப்டன் விஜயகாந்த் கூட்டணி மீது நிறைய எதிர்பார்ப்பு இருக்கிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.