Show all

‘உலகின் பெண்கள்-2015’ என்ற தலைப்பில் ஐ.நா.அவை ஆய்வு அறிக்கை வெளியீடு.

இந்தியாவில் பெண்களை விட ஆண்கள் அதிகளவில் இருப்பதாக ஐ.நா. அவை ஆய்வில் தெரியவந்து உள்ளது.

ஆண், பெண் விகிதம் குறித்து,

‘உலகின் பெண்கள்-2015’ என்ற தலைப்பில் ஐ.நா.அவை ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது.

அதில்,

கிழக்கு ஆசியா, தெற்கு ஆசியா, மேற்கு ஆசியா ஆகியவற்றில் பெண்களை விட ஆண்கள் அதிகளவில் இருப்பதாக தெரியவந்து உள்ளது.

அதாவது, கிழக்கு ஆசியாவில் 50.5 மில்லியன் ஆண்களும், தெற்கு ஆசியாவில் 49.5 மில்லியன் ஆண்களும்,

மேற்கு ஆசியாவில் 12.1 மில்லியன் ஆண்களும் உள்ளனர்.

கிழக்கு ஆசியாவில் சீனாவில் மட்டும் 20 மில்லியன் ஆண்களும்,

தெற்கு ஆசியாவில் இந்தியாவில் மட்டும் 43 மில்லியன் ஆண்களும் உள்ளனர்.

அதிக மக்கள்தொகையைக் கொண்ட நாடுகளான சீனா, இந்தியா ஆகிய நாடுகள் தான் உலகில் ஆண்கள் விகிதாச்சாரத்தை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிப்பதாகவும் ஆய்வில் தெரியவந்து உள்ளது.

இந்தியாவில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் இறப்பு விகிதம் 100 பெண் குழந்தைகளுக்கு 93 ஆண் குழந்தைகள் என்று உள்ளது. 100 குழந்தைகளுக்குள் அதிக பெண் குழந்தைகள் இந்தியாவில் தான் இறக்கின்றன.

பாலினம் சார்ந்த கருக்கலைப்பு சட்டவிரோதமானது என்று 1996-ம் ஆண்டு சட்டம் வந்ததில் இருந்து ஆண்-பெண் விகிதத்தில் சிறிது மாற்றம் ஏற்பட்டு உள்ளது. இதுபோன்று பெண்களை விட ஆண்கள் அதிகமாக இருப்பதற்கு இந்தியாவில் பொதுவாக ஆண் குழந்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதே காரணம் என்று தெரியவந்து உள்ளது.

இந்தியாவில் 1995-ம் ஆண்டில் இருந்து 2013-ம் ஆண்டுக்குள் பெண்களை கட்டாயப்படுத்தி வேலையில் ஈடுபடுத்துவது 35 சதவீதத்தில் இருந்து 27 சதவீதமாக குறைந்து உள்ளது. அதேபோல், சீனாவில் 72 சதவீதத்தில் இருந்து 64 சதவீதமாக குறைந்து உள்ளது.

குழந்தைகள் திருமணத்தை பொறுத்த வரை தெற்கு ஆசியா, ஆப்பிரிக்கா பகுதிகளில் சாதாரணமாக காணப்படுகிறது. உலகில் 3-ல் ஒரு பங்கு குழந்தை திருமணம் இந்தியாவில் நடைபெறுவதாக ஆய்வில் தெரியவந்து உள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.