Show all

ஒரு நிமிடம் கூகுள்.காம் இணையதளத்தின் உரிமையாளர் என்ற பெருமையை பெற்றார் சன்மே.

கூகுள்.காம் இணையதளத்தின் உரிமையாளராக இந்தியர் ஒருவர் மாறினார். ஒரு நிமிடம் மட்டுமே அவரால் உரிமையாளராக இருக்க முடிந்தது. கூகுள் நிறுவனத்தின் அஜாக்கிரதையால் இது நடந்துள்ளது. அமெரிக்காவில் உள்ள பாப்சன் கல்லூரியில் எம்பிஏ படித்து வருபவர் சன்மே வெத். அமெரிக்கவாழ் இந்தியரான இவர், விற்பனைக்கு வரும் இணையதளங்களை வாங்கும் பழக்கம் கொண்டவர். இந்நிலையில், கூகுள்.காம் பெயரை விளையாட்டாக  பதிவு செய்துள்ளார். இணையதளங்கள் விற்பனைக்கு இல்லை என்றால் பதிவு ஏற்றுக் கொள்ளப்படாது. ஆனால், கூகுள்.காம் பெயரை பதிவு செய்தபோது, அது ஏற்றுக் கொள்ளப்பட்டது.

சன்மேவின் கணக்கில் இருந்து 12 டாலர் பிடித்தம் செய்யப்பட்ட விவரம் வந்தது. மேலும், கூகுள்.காமின் உரிமையாளர் என மெசேஜ் வந்தது. இதனால் சான்மே ஆச்சரியம் அடைந்தார். இந்நிலையில், சன்மேவின் பதிவு ஒரு நிமிடத்தில் தள்ளுபடியானது. மீண்டும் அவர் முயற்சித்து பார்த்தார். ஆனால் பயன் இல்லை. இதன்மூலம் ஒரு நிமிடம் கூகுள்.காம் இணையதளத்தின் உரிமையாளர் என்ற பெருமையை பெற்றார் சன்மே. இதுகுறித்து தனது பிளாக்கில் சான்மே எழுதியுள்ளார்.  கூகுள் நிறுவனத்தின் அஜாக்கிரதையால் இது நடந்துள்ளது. இதுபற்றி கூகுள் நிறுவனத்தின் பாதுகாப்பு பிரிவு விசாரணை நடத்தி வருகிறது.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.