Show all

தேமுதிக தொண்டர்கள் உற்சாகம்! இணையத்தில் வெளியான படங்கள்; அமெரிக்காவில் விஜயகாந்த் பிரேமலதா திருமண நாள் கொண்டாட்டம்

18,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: அமெரிக்காவில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிகிச்சை பெற்று வரும் நிலையில் மனைவி பிரேம லதாவுடன் 29வது திருமண நாளை கேக் வெட்டி கொண்டாடினார். 

தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருகிறார். மக்களவை தேர்தலை எதிர்கொண்டு இருக்கும் நிலையில் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், தேமுதிக யாருடன் கூட்டணி வைக்க இருக்கிறது என்ற எதிர்பார்ப்பு அவரது கட்சி தொண்டர்களிடையே ஏற்பட்டுள்ளது. 

அமெரிக்காவுக்கு சிகிச்சைக்காக சென்ற தங்களது தலைவர் எப்போது திரும்புவார். நல்ல உடல் ஆரோக்கியத்துடன் திரும்புவாரா என்று காத்துக் கொண்டுள்ளனர். அமெரிகாவில் சிகிச்சை பெற்று திரும்பும் விஜயகாந்த் நல்ல நிலையில் தேர்தல் கருத்துப் பரப்புதலில் ஈடுபடுவார் என்று அவரது மனைவி ஏற்கனவே அறிவித்து இருந்தார். 

இந்த நிலையில், விஜயகாந்தும் அவரது மனைவியும் தங்களது 29வது திருமண நாளை கேக் வெட்டி கொண்டாடினர். அந்தப் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி தேமுதிக தொண்டர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,049.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.