Show all

அன்புமணி ராமதாஸ் முதல்வராக வந்தால் போதும் என்று மக்கள் நினைக்கிறார்கள்: அன்புமணி

வண்டலூரில் உள்ள வி.ஜி.பி. திடலில் நேற்று மாலை பா.ம.க. மாநில அரசியல் மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் பா.ம.க.வின் இளைஞர் அணி தலைவரும், முதல் அமைச்சர் வேட்பாளருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் மாநாட்டில் கொடியை ஏற்றி வைத்தார்.

 

மாநாட்டுக்கு பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி தலைமை தாங்கினார். பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் முன்னிலை வகித்தார். மாநாட்டுக்கு வந்தவர்களை முன்னாள் நடுவண் அமைச்சர் ஏ.கே.மூர்த்தி வரவேற்றார்.

    

     இன்றைய அரசியல் சூழ்நிலையில், வளரும் கட்சி பா.ம.க. மட்டும்தான். புது திட்டம் வேண்டும், மாற்றம் வேண்டும் என்று கோடிக் கணக்கான மக்கள் காத்திருக்கிறார்கள். டாக்டர் அன்புமணி ராமதாஸ் முதல் அமைச்சராக வந்தால் போதும் என்று மக்கள் நினைக்கத் தொடங்கி விட்டார்கள்.

 

எங்களுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள். இந்த அன்பு மணிக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள். 50 ஆண்டு காலம் திராவிட ஆட்சியில் செய்யாத திட்டங்களை 5 ஆண்டுகளில் இந்த அன்பு மணி செய்து முடிப்பான்.

 

இன்னும் 2 மாதம் தான் இருக்கிறது. இறுதியில் நாம் வெற்றி பெறுவோம்.

 

கூட்டணிக்கு அ.தி.மு.க., தி.மு.க.வை தவிர யார் வந்தாலும் மகிழ்ச்சி, வராவிட்டால் மிக்க மகிழ்ச்சி இந்த முடிவை உங்களை நம்பி, இளைஞர்களை நம்பி எடுத்து இருக்கிறோம். மாற்றத்தை நோக்கி நமது பயணம் தொடர்கிறது.

 

முதல் நாள், முதல் கையெழுத்து, பூரண மதுவிலக்கு இது தான் எங்கள் நிலைப்பாடு. ஆனால் இன்றைக்கு யார்? யாரோ? நாங்கள் சொன்னதை காப்பி அடிக்கிறார்கள்.

 

நான் போடும் கையெழுத்துக்காக கோடிக்கணக்கான குடும்பங்கள் காத்திருக்கிறது. நாம் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு இதை செய்வோம். மது என்பது சமுதாய பிரச்சினை இதை தடுக்க வேண்டும். மதுவை ஒழிக்க வேண்டும். மது ஒழிப்பு மற்றும் மதுவால் வாழ்வு இழப்பவர்களுக்கு மறுவாழ்வு மையம் அமைப்போம். இளம் விதவைகளுக்கு வாழ்வாதாரம் அமைக்கும் வகையில் சுயமாக தொழில் தொடங்க வழிவகை செய்வோம்.

 

நாங்கள் ஆட்சிக்கு வந்தால், பூரண மது விலக்கை அமல்படுத்தி, சட்ட விரோதமாக யாராவது மது விற்றால் அதை எங்களுக்கு தெரியப்படுத்தும் மக்களுக்கு ரூ.10 ஆயிரம் பரிசுத் தொகை வழங்குவோம். மேலும் மது விற்பனையைத் தடுக்காத காவல்துறை அதிகாரிகள் நீக்கம் செய்யப்படுவார்கள். உயர் அதிகாரிகள் பதவி உயர்வு பெற முடியாத அளவுக்குத் தடை செய்வோம்.

 

இன்றைக்கு டாஸ்மாக் பாரில் வேலை செய்பவர்களில் 82 பேர் பொறியாளர்கள், ஆயிரம் பேர் பட்டதாரிகள். இவர்களுக்கு நிரந்தர மாற்று வேலையை உருவாக்குவோம்.

 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.