Show all

ஆளும் அதிமுக அதிர்ச்சியில்! செயலலிதா சமாதியில் தினகரனுக்காகக் கூடிய கூட்டம்

19,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: செயலலிதா சமாதியில் தினகரனுக்காகக் கூடிய கூட்டம் ஆளும்கட்சிக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளது. எம்ஜிஆர், ஜெயலலிதா விசுவாசிகள் தினகரன் பக்கம் செல்வதாக இதை எடுத்துக்கொள்ளலாம். சமாதியில் கூடிய கூட்டத்தை ஸ்டாலினும் கவனித்திருக்கிறார் என்கின்றனர் திமுக வட்டாரத்தில்.  முன்னாள் முதல்வர் செயலலிதா இறந்து இன்றோடு இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டன. இன்று காலை வாலஜா சாலையிலிருந்து செயலலிதா சமாதி வரையில் அமைதிப் பேரணியை நடத்தினார் எடப்பாடி பழனிசாமி. இந்தப் பேரணியில் ஓ.பன்னீர்செல்வம், ஜெயக்குமார், கே.பி.முனுசாமி, முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, கோகுல இந்திரா உட்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்துகொண்டனர். கறுப்புச் சட்டை அணிந்து சோகமாகக் காட்சியளித்தார் எடப்பாடி பழனிசாமி. 

இதே இடத்திலிருந்து தினகரனும் அமைதிப் பேரணியைத் தொடங்கினார். ஆளும்கட்சிக்குக் கூடிய கூட்டத்தைவிட தினகரனுக்காக வந்து சேர்ந்த கூட்டம், அமைச்சர்களுக்குக் கூடுதல் அதிர்ச்சியை அளித்துள்ளது. இந்தக் கூட்டத்தைக் கண்ட திமுக நிர்வாகிகளும் ஸ்டாலின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளனர். 

எம்.ஜி.ஆர், செயலலிதா அபிமானிகள் தினகரன் பக்கம் செல்லவே விரும்புகின்றனர். எனவே, மெரினாவில் தினகரனுக்காகக் கூடிய கூட்டம், எங்களுக்கு ஒருவகையில் சாதகமானதுதான். அ.தி.மு.கவின் வாக்குவங்கி பிளவுபடும்போது தி.மு.கவுக்கான வெற்றி வாய்ப்புகள் அதிகம் என திமுகவினர் மகிழ்ச்சி அடைகின்றனர். 

ஆனால் தமிழக மக்கள் அதையும் சேர்த்து சிந்தித்து, தினகரனை ஒட்டுமொத்தமாக தூக்கிப் பிடிப்பார்கள் என்பதுதான் உண்மை. செயலலிதாவை எதிர்கொள்வதில் திமுகவுக்கு அதே சிரமம் தினகரனை எதிர் கொள்வதிலும் இருக்கவே செய்யும் என்பதுதான் உண்மை.

கூட்டத்தைத் திரட்ட மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்து அ.ம.மு.க நிர்வாகி ஒருவர் கூறும் போது, இதற்கென எந்தத் திட்டமும் வகுக்கப்படவில்லை. சமாதிக்கு வாருங்கள் என அறிக்கை மட்டுமே வெளியிட்டார் தினகரன். தே.மு.தி.க தொடங்கிய காலத்தில் விஜயகாந்த் தன் சொந்தக் காசை செலவழித்ததால், எங்கே கூட்டம் நடந்தாலும் பெரும் கூட்டம் ஒன்று தேடி வந்தது. அதேபோல தான், இப்போது தினகரனுக்கும் கூட்டம் கூடுகிறது. புதிய மாற்றுக்கான உணர்வாகத்தான் இதைப் பார்க்க முடிகிறது. அண்ணா திமுக  தொண்டர்கள் தினகரன் தலைமையை உற்சாகத்துடன் வரவேற்கின்றனர். ஆட்சி, அதிகாரத்திற்காக மனமில்லாமல் கொஞ்சப்பேர் அங்கே உள்ளனர். பலகூட்டங்களில் இதை நிரூபித்தாலும் ஊடகங்கள் இதை மறைத்தாலும், செயலலிதா இறந்த பிறகு வேறு எந்தக் கட்சிக்கும் சாரை சாரையாக அ.தி.மு.க தொண்டர்கள் இடம்பெயர்ந்ததாகத் தகவல் இல்லை. ஆட்சி மாறினால் காட்சி மாறும். அப்போது வேண்டுமானால், கட்சி நிர்வாகிகள் மாறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று கூறினார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்;டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,69,992.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.