Show all

மோடியின் இல்லத்தைக் காட்டிலும் சோனியா காந்திக்கு ஒதுக்கப்பட்ட வீடு பெரியது

டெல்லியில் பிரதமர் மோடியின் அதிகாரப்பூர்வ இல்லத்தைக் காட்டிலும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு ஒதுக்கப்பட்ட வீடு பெரியது என தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் பிரதமர், அமைச்சர்கள், எதிர்கட்சி தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் ஆகியோருக்கு நடுவண் அரசின் சார்பாக பொதுப்பணித்துறை பங்களாக்களை வழங்கி வருகிறது. ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள 7ம் எண் மாளிகை பிரதமர்களுக்கான அதிகாரப்பூர்வ இல்லமாகும். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஜன்பத் சாலையில் உள்ள 10ம் எண் இல்லத்தில் நீண்ட நாட்களாக தங்கி வருகிறார். அரசியல் தலைவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வீடுகளின் விவரம் குறித்து தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தேவ் ஆசிஷ் பட்டாச்சாரியா என்பவர் தாக்கல் செய்ய விண்ணப்பத்துக்கு பொதுப்பணித்துறை அளித்த பதில் விவரம்:

பிரதமர் மோடியின் அதிகாரப்பூர்வ இல்லம் சுமார் 14 ஆயிரம் சதுர அடி பரப்பில் அமைந்துள்ளது. சோனியா காந்தி இல்லத்தின் பரப்பு சுமார் 15 ஆயிரம் சதுர அடி. ராகுல் காந்தி வசித்து வரும் 12, துக்ளக் சாலை பங்களாவின் பரப்பு 5 ஆயிரம் சதுர அடி. லோதி எஸ்டேட்டில் பிரியங்கா காந்திக்கு 2 ஆயிரத்து 700 சதுர அடி பங்களா ஒதுக்கப்பட்டுள்ளது. துணை ஜனாதிபதிக்கு மவுலானா ஆசாத் சாலையில் 26 ஆயிரம் சதுர அடி பங்களா ஒதுக்கப்பட்டுள்ளது. பிரியங்கா காந்தி குடும்பத்துக்கு இமாச்சல பிரதேசத்திலும் பல வீடுகள் உள்ளன. ஆனால் அவை பற்றிய தகவல்களை அளிக்க அந்த மாநில அரசு மறுத்து விட்டதாக பட்டாச்சாரியா தெரிவித்துள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.