Show all

தமிழகத்தின் விடி வெள்ளியாக இதோ இன்னொரு புதிய கட்சி மக்கள் தே.மு.தி.க.

மக்கள் தே.மு.தி.க. கட்சியைத் தொடங்கிய சந்திரகுமார் தே.மு.தி.க.வை உடைக்கும் எண்ணம் இல்லை என்று பேசிஉள்ளார்.

தே.மு.தி.க.வில் இருந்து நீக்கப்பட்ட சந்திரகுமார் சட்டமன்றஉறுப்பினர் உள்பட 10 பேர் சார்பாக வெளியிடப்பட்ட கூட்டறிக்கையின்படி,

இன்று தே.மு.தி.க. அதிருப்தியாளர்கள் கூட்டம் சென்னையில் நடைபெற்றது.

இதனையடுத்து பேசிய சந்திரகுமார்,

மக்கள் தே.மு.தி.க. கட்சியை தொடங்கியதாக அறிவித்து உள்ளார்.

தே.மு.தி.க.வை உடைக்கும் எண்ணம் எங்களுக்கு கிடையாது. தமிழகத்தில் அ.தி.மு.க. அரசை அகற்றுவதற்காக மக்கள் தே.மு.தி.க. உருவாக்கப்பட்டு உள்ளது.

விஜய்காந்தை என்றும் குறை சொல்ல மாட்டோம். வைகோவைப் போன்ற எண்ணம் எங்களுக்கு கிடையாது. தே.மு.தி.க. மக்கள் நலகூட்டணியில் இணைந்தது வருத்தம் அளிக்கிறது, என்று சந்திரகுமார் கூறிஉள்ளார்.

 

தே.மு.தி.க.-மக்கள்நல கூட்டணியுடன் கூட்டணி அமைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தே.மு.தி.க. அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்கள் சந்திரகுமார், பார்த்திபன், சேகர் உள்பட மாவட்ட செயலாளர்கள் பத்திரிகையாளர்களைச் சந்தித்து பேட்டியளித்தனர். இதையடுத்து, அவர்கள் அனைவரையும் தே.மு.தி.க. தலைமைக்கழகம் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கியது. இதனைத் தொடர்ந்து தே.மு.தி.க. முழுக்க முழுக்க பிரேமலதா கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிட்டது என்றும் அதிருப்தி சட்டமன்றஉறுப்பினர் சந்திரகுமார் தெரிவித்தார்.

 

இப்போது சந்திரகுமார் மக்கள் தே.மு.தி.க. என்ற கட்சியை தொடங்கி உள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.