Show all

இடைத்தேர்தலில் திமுகவிற்கு தலைவலியா? இன்று அதிகாலையிலேயே கீச்சுவில் தலைப்பானது: ‘நாங்கள் ஆதரிக்கிறோம் சீமானை’

‘நாங்கள் சீமானை ஆதரிக்கிறேம்’ என்பது கீச்சுவில் நேற்று மாலையில் இந்திய அளவில் தலைப்பான நிலையில், இன்று அதிகாலையிலேயே கீச்சுவில் இந்திய அளவில் தலைப்பாகி யிருக்கிறது.

28,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழீழ இறுதிக் கட்ட போரில், விடுதலைப் புலிகளோடு இலட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப் படுவதற்கு இந்தியாவை ஆளும் வாய்ப்பில் இருந்த காங்கிரஸ் அரசு துணை போனது என்று கடந்த இருபத்தெட்டு ஆண்டுகளாக நாம்தமிழர் கட்சியினர் முழங்கி வரும் நிலையில், இந்த இடைத்தேர்தலில், அது சீமானால் புதியதாக முன்னெடுக்கும் கருத்துப் பரப்புதல் போல, காங்கிரஸ் தன்னுடைய இருப்பை காட்டிக் கொண்டுள்ளது திமுகவிற்கான தலைவலியாகவே பார்க்கப் படுகிறது.

தமிழீழ இறுதிக் கட்ட போரில், விடுதலைப் புலிகளோடு இலட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப் படுவதற்கு இந்தியாவை ஆளும் வாய்ப்பில் இருந்த காங்கிரஸ் அரசு துணை போனது என்று கடந்த இருபத்தெட்டு ஆண்டுகளாக நாம்தமிழர் கட்சியினர் முழங்கிய போது: எந்த ஒரு ஐயப்பாட்டையும் இணையத்தில் தேடி உறுதி செய்து கொள்கிற பழக்கம் தமிழகத்தில் வெகுவாக பழக்கத்தில் வந்து விட்ட நிலையில், பொது நிலையாளர்கள், அது குறித்து இணையத்தில் தேடிய போது கீழ்கண்டவாறு நாம் தமிழர் கட்சியினரின் கூற்றுக்கான ஆதாரம் விக்கிப்பீடியாவில் கிடைக்கத்தான் செய்தது.

புதுக்குடியிருப்பில் நச்சு வாயுத் தாக்குதல்:
புதுக்குடியிருப்பில் இலங்கைப் படையினர் வேதி ஆயுதங்களால், குறிப்பாக நச்சு வாயுவால் தாக்குதல் நடத்தி உள்ளதாக விடுதலைப் புலிகள் குற்றம் சாட்டி உள்ளார்கள். இந்தத் தாக்குதல்களில் இருந்து தப்பி வந்த விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதியான லோரன்சு இந்த தகவலை வெளியிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் நூற்றுக்கணக்கான உறுப்பினர்களை கொன்று குவித்ததாக இலங்கை பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த வேதி ஆயுதங்கள் இலங்கை படையினருக்கு இந்திய அரசாங்கத்தால் தரப்பட்டதாகும்.

ஆனால் இந்த செய்திகள் தமிழ் ஆர்வலர்களின் மன உள்ளீடாக அமிழ்ந்து கிடந்தது. இந்த நிலையில், இந்த இடைத்தேர்தலை அடுத்து வரபோகிற பொதுதேர்தலுக்கான சிறந்த முன்னோட்டமாக திமுக கருதியிருந்த நிலையில், திடீரென்று காங்கிரஸ் இந்த முறை சீமானின் பேச்சை பெரிது படுத்தி இடைத் தேர்தலில் திமுகவிற்கான வெற்றி வாய்ப்பை அதிமுகவிற்கு சாதகமாக்க வேண்டிய தேவை எழுந்தது ஏன் என்று அரசியல் பார்வையாளர்களிடையே கேள்வி எழுந்துள்ளது.

தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதிகள் மற்றும் புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதிக்கு வரும் திங்கட் கிழமை இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனுக்கள் பெறப்பட்டு பரிசீலனை முடிவடைந்த நிலையில், இறுதி வேட்பாளர் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது

அதன்படி, விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன், திமுக வேட்பாளர் புகழேந்தி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கந்தசாமி உள்ளிட்ட 12 தன்விருப்ப வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

முத்தமிழ்செல்வனுக்கு இரட்டை இலை சின்னமும், புகழேந்திக்கு உதயசூரியன் சின்னமும், கந்தசாமிக்கு கரும்பு விவசாயி சின்னமும், இயக்குநரும், தமிழ் பேரரசு கட்சியின் நிறுவனருமான கௌதமனுக்கு சாவி சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதேபோல், நாங்குநேரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் நாராயணன், திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன், நாம் தமிழர் கட்சியை சேர்ந்த ராஜ நாராயணன், தேசிய மக்கள் சக்தி கட்சியைச் சேர்ந்த காட்பிரே வாஷிங்டன் நோபுள் இவர்களுடன் 19 தன்விருப்ப வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

காங்கிரசின் இந்தப் புலிவால் பற்றும் முயற்சியால், கொஞ்சம் நாம் தமிழர்கட்சிக்கும், நிறைய அதிமுகவிற்கும் பலன் கிடைக்கும் என்று கருத்துக் கணிப்புகள் ஓடிக் கொண்டிருக்கின்றன.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,306.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.