Show all

சகாயத்திடம் தான் ஒரு கட்சி தொடங்கும் விருப்பத்தை வெளிப்படுத்தினார் ஓர் இளைஞர்

சட்ட ஆணையர் சகாயம் தனக்கு அரசியல் களமிறங்க விருப்பம் இல்லை என்று கூறியிருந்த நிலையில், அவர் பங்குகொண்ட கூட்டம் ஒன்றில், இளைஞர் ஒருவர் சகாயத்திற்கு கட்சியின் பெயரை அறிவித்துள்ளார்.

 

     குடியரசு தினமான செவ்வாய்க் கிழமை மாலை திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே, கவிஞர் நந்தலாலா தலைமையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கத்தின் வயல் கூட்டம் நடைபெற்றது.

 

இந்தக் கூட்டத்தில் பங்குகொண்டு பேசிய சட்ட ஆணையர் சகாயம் ஐ.ஏ.எஸ்., “இன்றைய இளைய சமுதாயத்தினர் அநீதிக்கு எதிராகக் குரல் எழுப்ப வேண்டும். இந்தியா ஜனநாயக நாடு. ஜனநாயகம் என்பது மக்களுடைய அதிகாரம் என பொருள்படும். மக்களுக்குக் கிடைத்த அதிகாரத்தை குடியரசு நாளாகக் கொண்டாடுகிறோம். ஆனால், தற்போது மக்களுக்கு அதிகாரம் என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

 

தேசத்தந்தை காந்தியடிகள் இந்தியாவின் வளர்ச்சி கிராமங்களில் உள்ளது என்றார். 1997 முதல் 2006-ஆம் ஆண்டு வரை நம் நாட்டில் 1,66,304 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர் என்று ஓர் ஆய்வு முடிவு கூறுகிறது.

 

விவசாயிகள், நெசவாளிகள், தொழிலாளிகள் வாழ்க்கை எப்போது ஏற்றம் மிகுந்ததாக மாறுகிறதோ, அப்போதுதான், இந்த தேசம் முன்னேறியதாக பொருள் கொள்ளப்படும்.

 

இளைஞர்கள் ஆடம்பரத்தை விடுத்து, தன்னலத்தை விரும்பாமல், பொதுநலத்தை பேண வேண்டும். அப்போதுதான் இந்த தேசம் மென்மேலும் வளரும்” என்றார்.

 

அப்போது இளைஞர் ஒருவர், ”சார், நீங்கள் அரசியலுக்கு வரமாட்டேன் என்று கூறிய உங்கள் பேச்சைக் கேட்டேன். இந்த நாட்டில் நமக்கு சோறுபோடும் விவசாயிகள் மதிக்கப்பட வேண்டும் என சொன்னீங்க. அதிலிருந்து விவசாயிகளின் துயரை துடைக்க வருங்காலத்தில் ஒருவன் வருவான்னு சொல்லிக்கிறேன். அது யாருமில்லை நான்தான் சார்.

 

உங்க பேச்சைக்கேட்டு கட்சிக்கு பெயர் கூட முடிவு பண்ணிட்டேன். ஆங்கிலத்தில் ளுவரனநவௌ யுபசiஉரடவரசந Pயசவல. ஏன் இந்தப் பெயரை தேர்வு செய்தேன் என்றால், இந்தத் தேசத்தில் கல்விக்கும், விவசாயத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். இவை இரண்டுக்கும் முக்கியத்துவம் கொடுத்தால் நாடு முன்னேறிவிடும். அதுதான் எனது குறிக்கோள்” என்று கூறியுள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.