Show all

தமிழகத்தில் 1984-ம் ஆண்டுக்கு பிறகு ஆளும் கட்சி மீண்டும் ஆட்சியை பிடிக்கிறது

தமிழக சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் முன்னிலை பெற்று அதிமுக மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் நிலையை எட்டியுள்ளது.

தமிழகத்தில் 1984-ம் ஆண்டுக்கு பிறகு ஆளும் கட்சி மீண்டும் ஆட்சியை பிடிப்பது இதுவே முதல்முறையாகும்.

 

தமிழகத்தில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிகளைத் தவிர்த்து 232 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு கடந்த 16ந் தேதி நடைபெற்றது. மொத்தம் 74.26 விழுக்காடு வாக்குகள் பதிவாகின.

 

இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தமிழகம் முழுவதும் உள்ள 68 மையங்களில் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. இதுவரை வெளியான முன்னணி நிலவரங்களின் அடிப்படையில், அதிமுக பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்கும் நிலையை எட்டியுள்ளது.

 

தற்போதையை நிலவரப்படி அதிமுக 134 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் அதிமுக அனைத்துத் தொகுதிகளையும் கைப்பற்றியுள்ளது. திமுக கூட்டணி 98 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

 

சென்னை மண்டலத்தில் அதிக இடங்களை கைப்பற்றியுள்ள திமுக கூட்டணி, கன்னியாகுமரி மாவட்டத்தில் அனைத்து இடங்களையும் கைப்பற்றியுள்ளது. விஜயகாந்த்தை முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தி களம் கண்ட தேமுதிக, தமாகா, மக்கள் நலக்கூட்டணி அணி ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை.

 

232 தொகுதிகளுக்கு இறுதி முடிவுகள்  அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் அதிமுக 134 தொகுதிகளிலும், திமுக கூட்டணி 98 தொகுதிகளிலும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.