Show all

வாழ்க! பாலமுருகன், பழனி நண்பர்கள் அனைவரும் பாராட்டி மகிழ்வோம்

அரியலூர்-செந்துறை சாலையில் ஒரு மஞ்சள் பையில் கிடந்த ரூ. 2 லட்சத்தை எடுத்து காவல் துறையினரிடம் ஒப்படைத்த இளைஞருக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அனில்குமார் கிரி புதன்கிழமை பாராட்டு தெரிவித்து சன்மானம் வழங்கினார்.

 

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் அருகேயுள்ள மேலஉசேன் நகரத்தைச் சேர்ந்தவர் 24அகவையுள்ள பாலமுருகன்.

அரியலூர்-செந்துறை சாலையில் உள்ள ஒரு தனியார் தூதஞசல் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர், செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணியளவில் செந்துறை சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்றபோது, சாலையில் ஒரு மஞ்சள் பை கிடந்துள்ளது.

 

அதை அவர் எடுத்து பார்த்தபோது, அதில் ரூ. 2 லட்சம் ரொக்கம், செந்துறை பகுதி நகை அடகுக் கடை உரிமையாளர் துரைசாமி என்பவரின் வங்கி சேமிப்பு புத்தகம் உள்ளிட்டவை இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து அவர் தனது நண்பர் ஊர்க் காவல் படையைச் சேர்ந்த பழனியிடம் தெரிவித்தார். அவர் வந்தபிறகு, இருவரும் அந்தத் தொகையை அரியலூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

 

இதையடுத்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அனில்குமார் கிரி, பாலமுருகன், பழனி ஆகியோரை தனது அலுவலகத்துக்கு புதன்கிழமை வரவழைத்து பாராட்டு தெரிவித்து, பரிசு வழங்கினார்.

 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.