Show all

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரித்து வருகிறது

சென்னையில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் தொடர் மழையில் காரணமாக செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

 

சென்னை அருகே வங்க கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கடந்த 3 நாள்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

 

இதன் காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், புழல், சோழவரம் ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரித்து வருகிறது. செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்தம் கொள்ளளவு 24 அடி.  இதில் புதன்கிழமை காலை நிலவரப்படி 19.49 அடி தண்ணீர் (2 ஆயிரத்து 464 மில்லியன் கனஅடி) உள்ளது.

 

ஏரிக்கு விநாடிக்கு ஆயிரத்து 190 மில்லியன் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. சென்னை குடிநீர் தேவைக்காக 160 கனஅடி தண்ணீர் சுத்திகரிப்பு ஆலைக்கு அனுப்பப்படுகிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் தண்ணீர் வரத்து மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவு 881 மில்லியன் கனஅடி ஆகும். இதில் தற்போது 91 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு விநாடிக்கு 91 கனஅடி தண்ணீர் வருகிறது.

 

புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3 ஆயிரத்து 300 மில்லியன் கனஅடி ஆகும். இதில் தற்போது ஆயிரத்து 1,724 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு விநாடிக்கு 786 கனஅடி தண்ணீர் ஏரிக்கு வருகிறது. 173 கனஅடி தண்ணீர் ஏரியில் இருந்து சென்னை குடிநீருக்கு அனுப்பப்படுகிறது.

 

பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3,231 மில்லியன் கன அடியாகும். இதில் தற்போது 917 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது.

 

செம்பரம்பாக்கத்தில் 122 மி.மீ மழை: செம்பரம்பாக்கம் ஏரியில் அதிகபட்சமாக 122 மி.மீ, சோழவரம் ஏரியில் 114 மி.மீ, புழல் ஏரியில் 88 மி.மீ, பூண்டி ஏரியில் 82.7 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

 

இந்த 4 ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11 டி.எம்.சி. (1,000 மில்லியன் கனன்டி 1 டி.எம்.சி.) ஆகும். இதில் தற்போது 5.19 டி.எம்.சி. தண்ணீர் இருப்பில் உள்ளது.

 

;

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.