Show all

செம்பரம்பாக்கம் ஏரி தற்போது பாதுகாப்பாக உள்ளது என்றும் தமிழக அரசு அறிவிப்பு

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தற்போது 3,500 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுவதாகவும், ஏரி தற்போது பாதுகாப்பாக உள்ளது என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பியதையடுத்து கடந்த புதன்கிழமை முதல் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 5 ஆயிரம் கன அடியில் இருந்து படிப்படியாக அதிகரிக்கப்பட்டு விநாடிக்கு 29 ஆயிரம் கன அடி வரை நீர் வெளியேற்றப்பட்டது. இதனால் அடையாற்றில் வௌ;ளப்பெருக்கு ஏற்பட்டது. கே.கே.நகர், சைதாப்பேட்டை, கோட்டூர்புரம், அடையாறு, மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதியில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டது பெருமளவு குறைக்கப்பட்டுள்ளதால் தற்போது வௌ;ளம் வடியத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை செம்பரம்பாக்கம் ஏரி உடைந்து ஊருக்குள் தண்ணீர் புகுந்து விட்டதாக புரளி கிளப்பி விடப்பட்டது. இதனால், ஆற்றங்கரை பகுதியில் வசிக்கும் மக்கள் அவசர அவசரமாக வெளியேறினர். பின்னர் அது தவறான தகவல் என அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

தற்போது நேற்றைய நிலவரப்படி செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து எவ்வளவு தண்ணீர் திறந்து விடப்படுகிறது என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை:

செம்பரம்பாக்கம் நீர்த்தேக்கத்தின் உயரம் 24 அடியாகும். அதில் தற்போது 21.95 அடி உயரம் வரை நீர் தேக்கப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு விநாடிக்கு 3493 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.  நீர்த்தேக்கத்தில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 3,500 கனஅடி ஆகும். செம்பரம்பாக்கம் நீர்த்தேக்கம் தற்போது பாதுகாப்பாக உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.