Show all

வீட்டு கடன் தவணையின் அபராதத் தொகை ரத்து செய்யப்படுவதாக எச்.டி.எப்.சி வங்கி அறிவிப்பு

சென்னையில் பல்வேறு பகுதிகளில் வெள்ளத்தால் பலர் வீடுகள் தண்ணீரில் மூழ்கி விட்டன. முடிச்சூர், ஊரப்பாக்கம் உள்ளிட்ட புறநகரங்களில் சிலரது வீடுகள் இடிந்து வீதிக்கு வந்துவிட்டனர்.  இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தங்களது வாடிக்கையாளர்களுக்கு, வீட்டு கடன் தவணையின் அபராதத் தொகையை ரத்து செய்யப்படுவதாக எச்.டி.எப்.சி வங்கி அறிவித்துள்ளது.

நவம்பர் மாதத்திற்கான அபாரதத் தொகையை ரத்து செய்துள்ள எச்.டி.எப்.சி வங்கி, மேலும் வெள்ளத்தால் வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கு ஏற்பட்ட சேதத்தை நிவர்த்தி செய்ய, உடனடி வீட்டு மேம்பாட்டு கடன்களான  குயிக் ஹோம் இம்ப்ரூவ்மெண்ட் லோன்களையும் வழங்கவும் நிர்வாகம் முடிவுசெய்துள்ளது.

இந்த வகை கடன்கள் அனைத்திற்கும் எவ்வித பிராசசிங் கட்டணங்களும் கிடையாது.

வரும் டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் சமர்பிக்கப்படும் விண்ணப்பங்களுக்கு மட்டுமே இந்த விதிமுறை செல்லுபடியாகும் என்றும் எச்.டி.எப்.சி வங்கி அறிவித்துள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.