Show all

வெஸ்ட் இண்டீஸ் வீரர் சுனில் நரைனுக்கு தடை

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரின். சமீபத்தில் இலங்கைக்கு எதிராக பல்லகெலேவில் நடந்த 3–வது ஒரு நாள் போட்டியின் போது இவரது பந்து வீச்சு சந்தேகம் அளிக்கும் வகையில் இருப்பதாக நடுவர்கள் புகார் அளித்தனர். இதைத் தொடர்ந்து கடந்த 17–ந்தேதி சுனில் நரினின் பந்து வீச்சு இங்கிலாந்தில் உள்ள பந்துவீச்சு பரிசோதனை மையத்தில் சோதனைக்குட்படுத்தப்பட்டது.

அவரது பந்து வீச்சின் அனைத்து வகைகளும் விதிமீறி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது விதிமுறைக்கு புறம்பாக, 15 டிகிரி கோணத்திற்கு மேல் அவரது முழங்கை வளைகிறது. இதையடுத்து சர்வதேச கிரிக்கெட்டில் பந்து வீச அவருக்கு உடனடியாக தடை விதிக்கப்படுவதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.