Show all

நல்ல தலைவர்கள் இல்லாத, தொன்மை வரலாறு வாய்ந்த தமிழ்ச் சமூகம்: சகாயம்

தேர்தல் தில்லுமுல்லுகளைத் தடுக்கும் பொறுப்பு இளைஞர்களுக்கு உண்டு என்று ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தெரிவித்தார்.

சு.சி.ஈஸ்வர் இயக்கத்தில் அஸ்வின்குமார், மணீஷா ஜித் உள்ளிட்டோர் நடிக்கும் புதிய படம்,

இணைய தலைமுறை.

படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் வௌ;ளிக்கிழமை நடைபெற்றது. இதில் இசை குறுந்தகட்டை வெளியிட்டு சகாயம் பேசியது:

     இளைஞர்கள் இந்தப் படத்தை தமிழ் சமூகத்திடம் எடுத்துச் செல்ல வேண்டும். கணினித் துறையில் பணியாற்றும் இளைஞர்கள், 2006-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் களத்தில் குதித்தனர்.

அந்த வகையில், சென்னை சேப்பாக்கம் தொகுதியில் ஊழலுக்கு எதிராக போட்டியிட்டவர் இந்தப் படத்தின் தயாரிப்பாளர் இளந்திருமாறன்.

2009-ஆம் ஆண்டு ஈழத்தில் நடந்த படுகொலைக்கு பின் நான் மனதளவில் நொந்து போய் இருந்தேன். தொன்மை, வரலாறு வாய்ந்த தமிழ்ச் சமூகம் ஈழத்தில் தன் உறவுகளை இழந்திருந்தது.

21-ஆம் நூற்றாண்டில் எந்தச் சமூகமும் சந்திக்காத இழப்பை சந்தித்தது. அந்தத் தருணத்தில் தமிழகத்தில் ஆசிரியர்கள், பேராசிரியர்கள், பேச்சாளர்கள், விஞ்ஞானிகள், படைப்பாளிகள் இருந்தனர். ஆனால், நல்ல தலைவர்கள் இல்லை. அந்த வருத்தம் எனக்கு இப்போதும் உண்டு.

நேர்மை என்பது கடன் வாங்காதது மட்டுமல்ல, லஞ்சத்துக்கு எதிரானது மட்டும் நேர்மை அல்ல. இந்த சமூகத்தில் ஏற்படும் அநீதிக்கு எதிராக பொங்குவதும் நேர்மைதான்.

எனக்கு அரசியலில் ஆர்வம் இல்லை. சமூக மாற்றங்களை உருவாக்குவோம். அரசியல் என்பது சமூகத்தின் அம்சம். அதன் வெளிப்பாடு. சமூகத்தை தூய்மைப்படுத்தினால்

அரசியலும் தூய்மையாகிவிடும். இளைஞர்களிடம் அளப்பரிய சக்தி இருக்கிறது. அவர்களுக்கு மாநிலத்தில் நடக்கும் தேர்தல் தில்லுமுல்லுகளை தடுக்கும் பொறுப்பு இருக்கிறது என்றார் அவர்.

விழாவில் இயக்குநர்கள் தங்கர்பச்சான், ஆர்.கே.செல்வமணி, சமுத்திரக்கனி உள்ளிட்ட திரையுலகினர் கலந்து கொண்டனர்.

 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.