Show all

உச்சக்கட்டப் போரில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டனர்.

கடந்த 2009-ம் ஆண்டு மே மாதம் இலங்கையில் ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடந்த உச்சக்கட்ட போரில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டனர். இந்த போரில் இலங்கை ராணுவம் மனித உரிமைகளை மீறிவிட்டதாக சர்வதேச நாடுகள் குற்றம் சாட்டின. அப்போதைய அதிபர் ராஜபக்சே விடுதலைப்புலிகள் மீது குற்றம் சாட்டினார்.

போர்க்குற்றங்கள் தொடர்பான அறிக்கையைத் தயாரிப்பதற்காக ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் ஒரு விசாரணை குழுவை நியமித்தது. இதை ராஜபக்சே ஏற்க மறுத்ததுடன் ஐ.நா. விசாரணை குழுவை இலங்கைக்குள் அனுமதிக்கவும் இல்லை.

கடந்த ஜனவரி மாதம் நடந்த அதிபர் தேர்தலில் ராஜபக்சே படுதோல்வி கண்டார். புதிய அதிபராக சிறிசேனா பதவி ஏற்றார். அவர் விசாரணை குழுவை ஏற்றுக்கொண்டார். இதனிடையே, ஐ.நா. விசாரணை குழு கடந்த மார்ச் மாதம் தனது அறிக்கையை தாக்கல் செய்ய முடிவு செய்தது.

ஆனால், விசாரணை குழு தனது அறிக்கையை ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலிடம் தாக்கல் செய்வதற்கு மேலும் 6 மாத கால அவகாசம் அளிக்குமாறு சிறிசேனா கேட்டுக் கொண்டார். இதற்கு ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலும் ஒப்புக்கொண்டது.

இதைத்தொடர்ந்து ஐ.நா. விசாரணை குழு திட்டமிட்டவாறு தனது விசாரணை அறிக்கையை தயாரித்து அதன் நகலை கடந்த வௌ;ளிக்கிழமை இலங்கை அரசிடம் தாக்கல் செய்தது. இந்த அறிக்கை குறித்து பதில் அளிக்க இலங்கை அரசுக்கு 5 நாட்கள் அவகாசமும் தரப்பட்டது.

இந்த நிலையில் சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவா நகரில் உள்ள ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலின் 3 வார கூட்டத்தொடர் திங்கட்கிழமை தொடங்கியது.

இலங்கையில் 2009-ம் ஆண்டு நடந்த போர் குற்றங்கள் தொடர்பான ஐ.நா. விசாரணை குழுவின் அறிக்கை திங்கட்கிழமை தொடங்கும் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படுகி

இந்த நிலையில் சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவா நகரில் உள்ள ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலின் 3 வார கூட்டத்தொடர் இன்று தொடங்கியது

இந்த தொடரில் ஐ.நா. விசாரணை குழு தனது அறிக்கையை தாக்கல் செய்கிறது. அத்துடன் இலங்கை அரசின் பதில் அறிக்கையும் தாக்கல் செய்யப்படுகிறது.

ஐநா மனித உரிமைகள் பேரவையின் இலங்கை தொடர்பான விசாரணை அறிக்கை வருகிற 16-ம் தேதி புதன்கிழமை முதல் பொதுப் பார்வைக்கு வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐநா மனித உரிமைகள் ஆணையர் செயித் அல் ஹுசைன் ஜெனீவாவில் 16-ம் தேதி காலை இந்த அறிக்கை குறித்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொள்கிறார் எனவும் அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2014-ம் ஆண்டு மார்ச் மாத அமர்வின்போது, நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் படியே, இலங்கை மீதான விசாரணை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் நல்லிணக்க ஆணைக்குழு விசாரணைக்கு எடுத்துக்கொண்ட காலப்பகுதிக்குள், மோதலில் ஈடுபட்ட இரண்டு தரப்பினராலும் புரியப்பட்டதாகக் கூறப்படும் பாரதூரமான மனித உரிமை மீறல்கள் மற்றும் குற்றச்செயல்கள் தொடர்பில் விரிவான விசாரணை நடத்துவதற்காகவே இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.

இந்த அறிக்கை கடந்த மார்ச் மாத அமர்விலேயே வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்த போதிலும், இம்முறை செப்டம்பர் அமர்விலேயே வெளியிடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.