Show all

பாலின சமத்துவ செயல் திட்டத்தோடு! முழுமையாக நாடளுமன்ற தேர்தலுக்கும், இடைத் தேர்தலுக்கும் தயாராகி விட்ட நாம்தமிழர் கட்சி

01,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துக் களமிறங்க உள்ளது நாம் தமிழர் கட்சி.  தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளிலும் சரிபாதியாக ஆண்களும் பெண்களும் போட்டியிடுவார்கள் என அறிவித்திருந்தார் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். இதன் தொடர்ச்சியாக எந்தெந்த தொகுதிகளில் ஆண்களும் எந்தெந்த தொகுதிகளில் பெண்களும் போட்டியிடுவார்கள் என்ற பட்டியலை இன்று வெளியிட்டிருக்கிறார். 

அந்த அறிவிப்பில், சட்டமன்ற இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி 21 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது. அதில் ஆண்களும் பெண்களும் தலா 11 மற்றும் 10 தொகுதிகளில் போட்டியிடுகிறார்கள் எனக் குறிப்பிட்டிருக்கிறார். நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான பட்டியலில், மத்திய சென்னை, திருப்பெரும்புதூர், அரக்கோணம், கிருட்டிணகிரி, திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், திருப்பூர், கோவை, திண்டுக்கல், தேனி, கரூர், பெரம்பலூர், சிதம்பரம், தஞ்சாவூர், தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, புதுச்சேரி, விருதுநகர் ஆகிய தொகுதிகளில் ஆண் வேட்பாளர்களும், திருவள்ளூர், வடசென்னை, தென்சென்னை, காஞ்சிபுரம், வேலூர், தர்மபுரி, ஆரணி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ஈரோடு, நீலகிரி, பொள்ளாச்சி, திருச்சி, கடலூர், மயிலாடுதுறை, நாகை, சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய 20 தொகுதிகளில் பெண் வேட்பாளர்களும் களமிறக்கப்பட உள்ளனர். 

21 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தலில் பெரம்பூர், ஆம்பூர், அரவக்குறிச்சி, நிலக்கோட்டை, விளாத்திகுளம், சாத்தூர், பாப்பிரெட்டிப்பட்டி, சோளிங்கர், திருவாரூர், ஒட்டப்பிடாரம், ஓசூர் ஆகிய தொகுதிகளில் ஆண் வேட்பாளர்களும் ஆண்டிப்பட்டி, பெரியகுளம், தஞ்சாவூர், அரூர், மானாமதுரை, குடியாத்தம், திருப்போரூர், திருப்பரங்குன்றம், பரமக்குடி, பூந்தமல்லி ஆகிய தொகுதிகளில் பெண் வேட்பாளர்களும் களமிறக்கப்பட உள்ளதாக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில தொகுதிகளிலாவது நாம் தமிழர் கட்சி வெற்றி பெற்றால் தமிழகத்திற்கு நல்லது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,062.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.