Show all

பீகார் மாநிலத்துக்கு அக்டோபர் 12ந்தேதி முதல் நவம்பர் 5ந்தேதி வரை 5 கட்டங்களாக தேர்தல்.

பீகார் மாநிலத்துக்கு அக்டோபர் 12ந்தேதி முதல் நவம்பர் 5ந்தேதி வரை 5 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. நவம்பர் 8ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.

பீகார் சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆலோசனை நடத்தியது.

பா.ஜனதா தலைவர் அமித்ஷா தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் மத்திய மந்திரியும், லோக் ஜனசக்தி தலைவருமான ராம்விலாஸ் பஸ்வான் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.

கடந்த சில தினங்களாக பா.ஜனதா - லோக் ஜன சக்தி கட்சிகள் இடையே சிக்கல் இருந்து வந்தது. இந்த ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு தொகுதி பங்கீட்டில் சுமூகமான உறவு ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

மொத்தம் உள்ள 243 இடங்களில் பாரதீய ஜனதா 160 தொகுதிகளில் போட்டியிடும் என்று தெரிகிறது. மீதியுள்ள 83 இடங்களில் லோக் ஜனசக்தி மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.