Show all

செயலலிதா சிகிச்சைக்கான மருத்துவ செலவு 6,85,69,584 ரூபாயாம்! 75 நாட்கள் அப்பல்லோ மருத்துவமனையில்

03,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: செயலலிதா மருத்துவமனையில் இருந்த போது உணவுக்கு 1,17,04.925 ரூபாய் செலவாகியுள்ளதாம். செயலலிதா 75 நாட்கள் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மருத்துவ  செலவு 6,85,69,584 ரூபாய் என தகவல் வெளியாகியுள்ளது.

லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பிலேக்கு 92,07,844 ரூபாயும்,  இயன் மருத்துவ சிகிச்சைக்காக 1,29,09,319 ரூபாய் சிங்கபூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனைக்கு கொடுக்கப்பட்டுள்ளது. செயலலிதாவிற்கான அறை வாடகையாக  24,19,800 ரூபாய் செலவு ஆகியுள்ளது.

மருத்துவ  செலவுக்கான  பணத்தை காசோலையாக 41,13,304 ரூபாய் அப்பல்லோவிற்கு வழங்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா இறப்பிற்கு பிறகு அதிமுக சார்பாக காசோலையாக 6,00,00,000 ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது. 

எனவே மருத்துவ செலவில்  6,85,69,584 ரூபாயில், 6,41,13,304 ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இதனால் 44,56,280 ரூபாய் அப்பல்லோவிற்கு இன்னும் தர வேண்டியுள்ளதாம்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,005.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.