Show all

தமிழ்நாட்டில் 14 இடங்களில் வெள்ள முன் அறிவிப்பு மையங்கள்

தற்போது பருவமழை காலங்களில் வானிலை அறிக்கை வெளியிடப்படுகிறது. இந்த வானிலை அறிக்கையை வானொலி, தொலைக்காட்சி ஊடகங்கள், பத்திரிகைகள் வாயிலாக மக்கள் தெரிந்து கொள்கிறார்கள்.

முக்கியமான காலகட்டங்களில் மாவட்ட நிர்வாகங்கள் மூலம்வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. என்றாலும் வெள்ள  அபாய எச்சரிக்கை பொது மக்களை சென்றடைவதில்லை. இதனால் உயிர்ச்சேதம் ஏற்படுகிறது. மேலும் வாட்ஸ் அப், பேஸ்புக் போன்ற சமூக வலை தளங்களில் மழைவெள்ளம் தொடர்பாக பொது மக்கள் மத்தியில் வதந்தி பரவி பீதி ஏற்படுத்துகிறது.

எனவே திடீர் என்று ஏற்படக்கூடிய வெள்ள பாதிப்புகளை முன்கூட்டியே அறிவிக்க வெள்ள முன் அறிவிப்பு மையங்களை அமைக்க நடுவண்அரசு முடிவு செய்துள்ளது.

தமிழ்நாட்டில் இத்தகைய வெள்ள முன் அறிவிப்பு மையங்கள் 14 இடங்களில் நடுவண் நீர்வளத்துறை அமைச்சகம் சார்பில் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது போன்ற மையங்கள் கேரளா, ஆந்திரா, ராஜஸ்தான் மாநிலங்களிலும் அமைக்கப்படும் என்றும் நடுவண் அரசு தெரிவித்துள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.