Show all

ட்விட்டரில் செய்தி அனுப்பும் முதல் கோழி பெட்டிதான் என்பதில் கின்னஸ் சாதனை படைப்போம்.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ‘சிக்கன் ட்ரீட்’ என்ற துரித உணவகம், தங்களிடம் வளரும் பெட்டி கோழிக்கு கம்ப்யூட்டர், கீ போர்ட், இன்டர்நெட் இணைப்புடன் ட்விட்டரில் கணக்கு ஒன்றைத் துவங்கியுள்ளது.

தனியாக ஒரு கூண்டில் இருக்கும் பெட்டி, கம்ப்யூட்டர் கீபோர்டில் ஏறி நின்று பட்டன்களை கால்களால் அழுத்துகிறது. உடனே ட்விட்டரில் அதற்கு பதில் வருகிறது. தற்போது பெட்டி 5 ஆங்கில எழுத்துகள் கொண்ட வார்த்தையை டைப் செய்யும் அளவுக்கு முன்னேறி உள்ளது.

கின்னஸ் சாதனை படைக்கவே, ட்விட்டரில் பெட்டியை ட்வீட் செய்ய வைத்துள்ளனர். ட்விட்டரில் பெட்டி கம்ப்யூட்டர் கீபோர்டில் டைப் செய்து கொண்டே, அதையும் அசுத்தம் செய்து வருகிறது. அது என்ன செய்தாலும் சரி, ட்விட்டரில் செய்தி அனுப்பும் முதல் கோழி பெட்டிதான் என்பதில் கின்னஸ் சாதனை படைப்போம் என்கின்றனர்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.