Show all

உத்தரபிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் தமிழ்நாட்டுக்கு ரூ.25 கோடி நிதி உதவி

சென்னையில் கடந்த வாரம் பெய்த பலத்த மழையால் பேரழிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து தமிழ்நாட்டுக்கு பலரும் நிதி உதவி அளித்து வருகிறார்கள். உத்தரபிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் தமிழ்நாட்டுக்கு ரூ.25 கோடி நிதி உதவி அளித்து அறிவிப்பு வெளியிட்டார்.

கடந்த சில நாட்களாக முதல்அமைச்சர் ஜெயலலிதாவிடம் வெள்ள நிவாரண நிதி குவிந்து வரும் நிலையில் உத்தரபிரதேச அரசின் நிதியும் வந்துள்ளது.

முதல் அமைச்சர் ஜெயலலிதா, உத்தரபிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவுக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.

அதில் அவர்,

தமிழ்நாட்டில் வெள்ள  நிவாரணப் பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், அதற்கு உதவும் வகையில் முதல்அமைச்சர் நிவாரண நிதிக்கு உங்களது சிறப்பான பங்களிப்பாக ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்து வழங்கியதற்கு உங்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

எனது தலைமையிலான தமிழக அரசு, தமிழ்நாட்டில் மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மீண்டும் இயல்பு நிலையை கொண்டு வர தொடர்ந்து தீவிரமாக பாடுபட்டுக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் தங்களது சிறப்பான பங்களிப்புக்காக மீண்டும் ஒரு தடவை இதயம் கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அந்த கடிதத்தில் முதல் அமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.