Show all

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் நடுவண் அமைச்சர்...

சென்னையில் நடைபெற்று வரும் 2 நாள் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பேசிய நடுவண் அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழகம் துடிப்பான, முன்னேறும் மாநிலம். தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கு சாதகமான சூழல் நிலவுகிறது. என கூறினார்

மேலும் அவர் கூறும் போது ஹரியாணா போன்ற மாநிலங்களைவிட தமிழகம் முதலீட்டாளர்களை ஈர்ப்பதில் பெரிதும் பங்குவகிக்கிறது. இந்திய பொருளாதாரத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி குறியீட்டில் உற்பத்தித் துறையின் பங்களிப்பு 17விழுக்காடாக உள்ளது.

இது மேலும் அதிகரிக்கப்பட வேண்டும். தொழில் முனைவோருக்கான வரி விதிப்புகளில் ஒற்றை சாரள முறை போன்ற பல்வேறு நவீன யுத்திகளை தமிழக அரசு ஏற்கெனவே பின்பற்றி வருவது பாராட்டத்தக்கது.

தொழில் முதலீடுகளை செய்வோர் வர்த்தக ரீதியில் ஏற்படும் சிக்கல்களைத் தீர்த்துக் கொள்ளும் வகையில் வர்த்தக நீதிமன்றங்கள் சட்ட மசோதா 2015 நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றங்களில் வர்த்தக நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்று கூறினார்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.