Show all

ஆளுநர் மாளிகை முற்றுகை இன்று! மதிமுக தலைமையில் பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்க கோரி

17,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: மதிமுக தலைமையில் பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்க கோரி ஆளுநர் மாளிகை முற்றுகையிடப்பட்டுள்ளது. மேலும் மதிமுக தலைமையில் 17 இயக்கங்கள் ஆளுநர் மாளிகை எதிரே முற்றுகை போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். போராட்டத்தில் தி.க, திமுக, விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் பங்கேற்றுள்ளனர். மேலும் மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, மே 17 இயக்கம் போன்ற இயக்கங்களும் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். 7 பேரை விடுவிக்காவிடில் ஆளுநர் மாளிகையை விட்டு ஆளுநர் பன்வாரிலால் வெளியேற வேண்டும் என வைகோ ஆவேசமாக பேசினார். 

பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்க வலியுறுத்தி ஆளுநர் மாளிகை முற்றுகையிடப்பட்டுள்ளது. தர்மபுரி பேருந்தில் 3 மாணவிகள் உயிரோடு எரித்து கொல்லப்பட்டனர். அந்த 3 மாணவிகளை எரித்துக் கொன்ற அதிமுகவினர் விடுவிக்கப்பட்டு உள்ளனர் எனவும் வைகோ கூறினார். 

மேலும் ராஜீவ்காந்தி கொலையில் எந்த தொடர்பும் இல்லாத 7 பேரை விடுதலை செய்வதில் தொடர்ந்து கால தாமதம் செய்து வருவதாக ஆளுநருக்கு வைகோ கடும் கண்டனம் தெரிவித்தார். இந்த முற்றுகை போராட்டத்தில் திமுக சார்பில் டி.கே.எஸ்.இளங்கோவன், மா,சுப்பிரமணியன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். 

காந்தியார் அவர்கள் கொலை வழக்கைப் போலவோ இந்திரா காந்தியார் அவர்கள் கொலை வழக்கைப் போலவோ வெளிப்படையாக வழக்காடாமல், அடிப்படையே இல்லாமல்- விடுதலைப் புலிகள் மீது குற்றம் சுமத்தி, 1.இவர்களையா ஆதரித்தோம்! என தமிழகத் தமிழர்களுக்குள் குற்றவுணர்ச்சி, 2.ஈழதமிழர் விடுதலை முறியடிப்பு என்று ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க, மர்மமாக முடித்துக் கொள்ளப் பட்ட ராஜிவ்காந்தி கொலை வழக்கை, மீண்டுமாக வெளிப்;;படையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழர்கள் கிளர்ந்தெழுவதற்கான வாய்ப்பையே இந்த ஏழுபேர் விடுதலையின் தாமதம் முன்னெடுக்கும். 

ராஜிவ்கொலைக் குற்றவாளிகள் உண்மையில் வெளியில் இருக்கிறார்கள், அப்பாவிகள் தண்டிக்க பட்டிருக்கிறார்கள் என்பதே, தொடக்கத்திலிருந்தே தமிழ் மக்களின் கருத்தாக இருக்கிறது. தங்கள் கருத்தை வெளிப்படுத்துவதற்கு எந்த வழிமுறையும் இல்லாத நிலையிலும், பெரிய தமிழக கட்சிகளான திமுகவோ. அதிமுகவோ அப்படியான நிலைபாட்டை எடுக்க முயலாத காரணத்தால், தமிழ் மக்கள் தங்களுக்கள் குமுறிக்கொண்டிருக்கிறார்கள். 

தற்போது காலம் கனிந்து வருவதால், பேரறிவாளன் உள்ளிட்ட ஏழுபேர் விடுதலை தள்ளிப் போகுமானால் அடுத்த கட்ட போராட்டம், அதிர்ச்சிப் போராட்டமாகவே அமையும்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்;டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,69,990.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.