Show all

கருத்துக் கணிப்பில் கூட, நோட்டாவிற்கு அடுத்துதான் வருமா பாஜக!

17,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: அடுத்து வரும் தேர்தலில் எந்தக் கட்சி பெரும்பான்மை பெரும் என்ற ஒரு இயங்கலை கருத்துக் கணிப்பில், திமுகவிற்கே அதிக வாக்குகள் கிடைத்திருக்கிறது. அதாவது 40.51 விழுக்காடு. இரண்டாவது இடத்தில் வலுவான கூட்டணிக்கே என்று 17.09 விழுக்காட்டினர் வாக்களித்திருக்கிறார்கள். ரஜினி (போட்டியிட்டால்) 12.66 விழுக்காட்டினர் வாக்களிக்கப் போவதாக உறுதி அளித்திருக்கிறார்கள். அடுத்த இடத்தைப் பிடிக்கிறார் கமல். கமலுக்கு 6.33விழுக்காட்டினர் வாக்களித்திருக்கிறார்கள். அடுத்த இடத்தில் பாமக வருகிறது. பாமகவிற்கு 5.07விழுக்காட்டினர் வாக்களித்துள்ளனர்.  

ஸ்டெர்லைட் அறப்போராட்டத்தில் அப்பாவி மக்களை கொன்று குவித்த அதிமுக மீது மக்களுக்கு கோபம் இருந்து கொண்டுதான் இருக்கிறது என்பதைக் காட்டும் முகமாக, பாமகவிற்கு அடுத்த நிலையில், அதிமுகவுக்கு வெறுமனே 5.05 விழுக்காட்டினரே ஆதரவு தெரிவித்து இருக்கிறார்கள். நாம் தமிழர் கட்சி 2விழுக்காடு வாக்குகளைப் பெற்றிருக்கிறது.  அதற்கு அடுத்த நிலையில் தேமுதிக 1.8 விழுக்காடு வாக்குகளைப் பெற்றிருக்கிறது. அடுத்து யாருக்கும் கிடைக்காது பெரும்பான்மை என்கிற நோட்டா வாக்கு 6.33 விழுக்காடாக அமைந்த நிலையில், ஆட்சியேறியதில் இருந்து அம்பானிக்கு தோள் கொடுப்பதும், அப்பாவி மக்களை அலைகழிப்பதைத் தவிர, இந்திய அளவிலும் சரி, தமிழக அளவிலும் சரி ஒரு ஆணியும் பிடுங்காமல், வைகோ சாடியிருப்பது போல, விதவிதமாய் அடையுடுத்தி உலகம் சுற்றிக் கொண்டிருக்கும் மோடியின் பாஜக 3.16 விழுக்காடு வாக்குகளைப் பெற்றிருக்கிறது.

கட்சி தொடங்கி மக்களைச் சந்தித்துக் கொண்டிருக்கிற கமலை விட, கட்சியே தொடங்காத நிலையில், ரஜினிக்கு மக்கள் அதிக ஆதரவு தருவதைக் கருத்தில் கொண்டு, தமிழர்களுக்கு எதிரான போக்குகளில் இருந்து தன்னை மாற்றிக் கொள்வது ரஜினிக்கு நல்லது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்;டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,69,990.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.