Show all

அணு சக்தி விநியோக கூட்டமைப்பு நாடுகள் கூட்டம் தொடங்கியது

தென் கொரியாவின் சியோல் நகரில் அணு சக்தி விநியோக கூட்டமைப்பு நாடுகள் கூட்டம் துவங்கியது. கூட்டத்தில் இந்தியாவை இணைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

 

இருப்பினும் இந்தியா சேருவதற்கு பிரேசில், நியூசிலாந்து, ஆஸ்திரியா, அயர்லாந்து, துருக்கி ஆகிய 5 நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதனைதொடர்ந்து இன்றைய மாநாடு கூட்டம் எந்த முடிவும் எட்டாமல் நிறைவு பெற்றது. மாநாட்டின் இரண்டாம் கட்ட கூட்டம் நாளை (வெள்ளி க்கிழமை) நடைபெற உள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.