Show all

திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தலாம்; மீதி பத்தொன்பது தொகுதி!

16,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: திருவாரூர் இடைத்தேர்தல் குறித்த அறிவிப்பை இன்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, வரும் 28வது நாளில் இடைத்தேர்தல் நடைபெறும் எனவும், அதற்கான அறிவிப்பானை வரும் மூன்றாவது நாளில் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதேபோல, வேட்புமனு பதிகை வரும் மூன்றாவது நாளில் தொடங்க உள்ளது. தேர்தல் அறிவிப்பைத் தொடர்ந்து கட்சிகள், வேட்பாளர் தேர்வில் தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளன. அந்த வகையில், திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிடுவது உறுதி என தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் அறிவித்துள்ளது. மேலும், வரும் நாளில் வேட்பாளர் யார் என்பதை அறிவிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

திமுக வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, திமுக சார்பில் தேர்தலில் போட்டியிட விரும்புவர்கள் இரண்டு நாளில் விண்ணப்பங்களைப் பதிகை செய்யலாம் எனவும், அதற்கடுத்த நாள் வேட்பாளர் நேர்காணல் நடைபெறும் எனவும் அக்கட்சித் தலைமை அறிவித்துள்ளது. 

கருணாநிதி மறைவு காரணமாக திருவாரூர் தொகுதி காலியாக உள்ளது. இந்த தொகுதிக்கு மட்டுமான இடைத்தேர்தலுக்கான தேர்தல் நாளினை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

திருப்பரங்;குன்றத்திற்கான இடைத்தேர்தலையும், தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் வென்ற பதினெட்டு சட்;டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலையும் நடத்தாமல், திமுகவின் தொகுதிக்கு மட்டும் தேர்தல் அறிவித்திருப்பது, அதிமுகவை தொடர்ந்து முற்றுகையில் வைத்திருப்பதான பாஜக நடுவண் அரசின் உள்நோக்கமோ என்ற ஐயம் நிலவுகிறது அரசியல் நோக்கர்களிடம்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,018.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.