Show all

போலி வாக்காளர்களை நீக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்

தமிழக வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்களை நீக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கருணாநிதி வலியுறுத்தி உள்ளார்.

 

தமிழ்நாட்டில் வாக்காளர் சேர்ப்பில் மிகப் பெரிய மோசடி நிகழ்ந்திருக்கக் கூடும் என்பது வாக்காளர் பட்டியல் மூலம் வெளி வந்திருக்கும் புள்ளி விவரங்களிலிருந்தும், இந்தப் புள்ளி விவரங்களை, மக்கள் தொகை புள்ளி விவரங்களோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போதும் தெரிகிறது.

 

தமிழகத்தின் மொத்த மக்கள் தொகையான 7.77 கோடியில் கடந்த 20-ந் தேதி வெளியிடப்பட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியலின்படி, வாக்காளர்களின் எண்ணிக்கை 5.79 கோடி, அதாவது 75.56 விழுக்காடு பேர். இந்தப் புள்ளி விவரம் யாரும் நம்பக் கூடியதாக இல்லை.

 

2011-ம் ஆண்டில் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 14 வயதுக்கு உட்பட்டவர்கள் 23.4 விழுக்காடு பேர், 15 வயது முதல் 18 வயது வரை உள்ளவர்கள் 6 விழுக்காடு; பேர். எனவே, 18 வயதுக்கு உட்பட்டவர்கள், அதாவது வாக்காளர்கள் பட்டியலில் சேர்க்கப்பட முடியாதவர்கள்,  29.4 விழுக்காடு பேர்.

 

 

மக்கள் தொகையில், மீதம் உள்ள 70.40 விழுக்காட்டினரே, வாக்காளர்களாக இருந்திருக்க வேண்டும். ஆனால் தற்போது வெளிவந்துள்ள வாக்காளர் பட்டியலில் 75.56 விழுக்காடு பேர் வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டிருப்பது ஆச்சரியமாகவும், பெருத்த மோசடியாகவும் உள்ளது.

 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.