Show all

பெருமழை காரணமாக விமான நிறுவனங்களுக்கு ரூ.1000 கோடி அளவுக்கு இழப்பு

சென்னையில் கடந்த வாரம் பெய்த பெரு மழையின் காரணமாக விமான நிலையத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் விமான நிறுவனங்களுக்கு ரூ. ஆயிரம் கோடி அளவுக்கு நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 30 மற்றும் டிசம்பர் 1ம் தேதி பெய்த பெரு மழை சென்னை விமான நிலையத்தை வௌ;ளத்தில் மிதக்க வைத்தது.

சுமார் 4 நாட்கள் விமான நிலையம் மூடப்பட்டது. விமான நிலையத்தை வெள்ளம்  சூழ்ந்த போது சுமார் 20 விமானங்கள் அங்கு இருந்தன. அதில் சில விமானங்களை வெள்ளம்  இழுத்து சென்றது. 2 பெரிய விமானங்களை இழுத்து சென்று வனப்பகுதிக்குள் வெள்ளம்  புரட்டி போட்டிருந்தது.

ஓடு பாதையின் மையப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ஓரிரு விமானங்கள் மட்டுமே தப்பின. மற்ற எல்லா விமானங்களும் வெள்ள நீரில் மிதந்தன. இதில் அவை கடுமையாக சேதம் அடைந்துள்ளன.  அவற்றை சீரமைக்க பல கோடி செலவாகும் என்று தெரிகிறது.

சென்னை விமான நிலையத்துக்குள் புகுந்த வெள்ளத்தால் சுமார் 35 விமானங்கள் சேதமடைந்துள்ளன. தனியார் விமான நிறுவனங்களின் நூற்றுக்கணக்கான சேவை 5 நாட்கள் முடங்கியது. இதனால் விமான நிறுவனங்களுக்கு ரூ.1000 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் வெள்ளம்  முழுமையாக வடிந்து விட்டாலும் இன்னமும் 100 சதவீத இயல்பு நிலை திரும்பவில்லை.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.