Show all

தமிழ் பேசாதே! மிகச்சரியான தண்டனை. தமிழகத் தொடர்வண்டித்துறையில் வடவர்மயத்தை கண்டு கொள்ளாமல் விட்டதற்கு

நடுவண் அரசின் நிருவாகத்தில் இருக்கும் தமிழகத் தொடர்வண்டித்துறையில் வடவர்மயமானதின் உச்சமாக இருக்கும் கொஞ்ச நஞ்சத் தமிழர்களுக்கும் வந்திருக்கிறது தமிழில் பேசத்தடை!

31,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழகத்தில் இயங்கும் துறை; தமிழ் மக்களுக்காக பிரித்தானிய காலணி ஆதிக்கத்தின் போது தொடங்கப் பட்ட துறை; தமிழ்ப் பணியாளர்களைக் கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக்கொண்டு வந்த துறை; இந்தத் துறையில் தற்போது தமிழில் பேச தடை விதிக்கப் பட்டிருக்கிறது. 

தமிழக தொடர்வண்டித்துறை அலுவலகத்தில் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே பேச வேண்டும் என்றும் அலுவல் விசயமாக அதிகாரிகள் யாரும் தமிழில் பேச கூடாது என்றும் தெற்கு தொடர்வண்டித்துறை அதிகாரி சிவா என்பவர் நேற்று இரவு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். 

இனி அடுத்த கட்டமாக- தமிழக ஆட்சியாளர்கள், எதிர்க்கட்சிகள் என்ன எதிர் நிலை எடுக்கப் போகிறார்கள் என்பதை தமிழக மக்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,183.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.