Show all

தென் ஆப்பிரிக்காவை 184 ரன்களுக்குள் சுருட்டியது இந்தியா

இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி  வியாழன் [05-01-15] அன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய டெஸ்ட் அணி கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார்.  அதன்படி இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 201 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது. இந்திய அணியில் அதிகப்பட்சமாக முரளி விஜய் 75 ரன்களும், ரவீந்திர ஜடேஜா 38 ரன்களும், புஜாரா 31 ரன்களும் எடுத்தனர்.

எல்கர் 4 விக்கெட்டும், இம்ரான் தாஹிர், பிலாண்டர் தலா இரண்டு விக்கெட்டும் வீழ்த்தினார்கள். பிறகு ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி, முதல்நாள் ஆட்டநேர முடிவில் தனது முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட் இழப்புக்கு 28 ரன்கள் எடுத்துள்ளது. எல்கர் 13, ஆம்லா 9 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

இந்நிலையில் இரண்டாம் நாள் தொடக்கத்தில், களத்தில் இருந்த ஹசிம் அம்லாவையும் [43 ரன்கள்], டீன் எல்கரையும் [37 ரன்கள்] சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் வெளியேற்றினார். அதற்கு பிறகு களமிறங்கிய வீரர்களில் டி வில்லியர்ஸ் தவிர ஒருவர் கூட இரட்டை இலக்கத்தை தொடவில்லை. இறுதியாக அரைச்சதம் எடுத்த டி வில்லியர்ஸ் 63 ரன்களில் வெளியேற 184 ரன்களுக்குள் தென் ஆப்பிரிக்கா அணி சுருண்டது.

இந்தியா தரப்பில் அஸ்வின் 5 விக்கெட்டுகளையும், ஜடேஜா 3 விக்கெட்டுகளையும், அமித் மிஸ்ரா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். அதை தொடர்ந்து தனது இரண்டாவது இன்னிங்க்சை ஆடிய இந்திய அணி இரண்டாம் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்தது. தவான் இரண்டாவது இன்னிங்சிலும் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். விஜய் 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கோலி 11 ரன்களுடனும் புஜாரா 63 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.