Show all

தமிழகத்துக்கு தரவேண்டிய நீரை உடனடியாக திறந்து விடுமாறு கர்நாடகத்துக்கு உச்சநீதிமன்றம் உத்த

காவரி நடுவர்மன்றம் தீர்ப்பளித்தபடி கர்நாடகம் தமிழகத்துக்குத் தண்ணீர் வழங்க மறுத்து வருகிறது. மழை காலத்தில் கர்நாடகத்தில் அணைகள் நிரம்பிய பிறகு உபரி தண்ணீரை மட்டும் திறந்துவிட்டு வருகிறது.

தற்போது தென்மேற்கு பருவமழை காலத்தில் கர்நாடக அணைகள் நிரம்பி விட்டன. அம்மாநில பாசனத்துக்குத் தண்ணீரை தாராளமாக பயன்படுத்தி வருகிறது. ஆனால் தமிழகத்துக்கு பெயரளவுக்கு குறைந்த அளவு தண்ணீரையே அவ்வப்போது திறக்கிறது.

இதனால் இந்த ஆண்டு மேட்டூர் அணை நிரம்பாத நிலையில் காவிரி டெல்டா பாசனத்துக்குத் தண்ணீர் திறக்கப்படுவதால் மேட்டூர் அணை நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது.

காவிரியில் தண்ணீர் திறக்க கர்நாடகத்துக்கு உத்தரவிடக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்அமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதினார்.

இந்த நிலையில் தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்திலும் இன்று புதிதாக ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அதில் காவிரியில் செப்டம்பர் 30ந் தேதி வரை கர்நாடகம் 45 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விட வேண்டும். ஆனால் உரிய அளவு நீரை திறக்காமல் கர்நாடகம் மறுத்து வருகிறது.

எனவே தமிழகத்துக்கு தரவேண்டிய நீரை உடனடியாக திறந்து விடுமாறு கர்நாடகத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.