Show all

நல்லகாலம் பொறக்குது! நல்லகாலம் பொறக்குது! யாருக்கு என்றுதான் தெரியவில்லை ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் செவ்வாய்அன்று

21,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஐந்து மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மூன்று மாநிலங்களில் தேர்தல்கள் முடிவடைந்தன. தெலுங்கானா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் இன்று தேர்தல்கள் நடைபெற்று வருகிறது.

தெலுங்கானாவில் காலை 7 மணிக்கே வாக்குப்பதிவு தொடங்கிவிட்டது. ராஜஸ்தானில் சரியாக 8 மணிக்கு வாக்குப் பதிவுகள் தொடங்கின.

தெலுங்கானாவில் இருக்கும் 119 தொகுதிகளில் இன்று தேர்தல் நடைபெறுகிறது. ஒரு திருநங்கை வேட்பாளர் உட்பட சுமார் 1821 வேட்பாளர்கள் இன்று களம் காண்கிறார்கள். வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு முடிவடையும். நக்சல்கள் நடமாடும் பகுதிகள் என்று கூறி, சில பகுதிகளில் 4 மணிக்கு வாக்குப்பதிவு முடிவடையும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ஆளும் கட்சியான தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி 119 இடங்களிலும் போட்டியிடுகிறது. காங்கிரஸ் 99 இடங்களிலும், அதன் கூட்டணி கட்சிகளான தெலுங்கு தேசம் 13 இடங்களிலும் இந்திய கம்யூனிஸ்ட் 3 இடங்களிலும் போட்டியிடுகின்றன. பாஜக 118 இடங்களில் களம் இறங்குகிறது.

ராஜஸ்தானில் சுமார் 4.77 கோடி வாக்களர்கள் உள்ளனர். பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தில் மொத்தம் 189 பெண்கள் உட்பட 2247 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் பகுஜன் சமாஜ் ஜேசிசி கூட்டணி (மாயாவதி-அஜித் ஜோகி), காங்கிரஸ் மற்றும் பாஜக என மும்முணை போட்டி நிலவி வந்தது. இரண்டு கட்டங்களாக அங்கு தேர்தல் நடத்தப்பட்டது. 

மத்திய பிரதேசம் மற்றும் மிசோரம் மாநிலம், ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானாவில் நடைபெறும் தேர்தல்களையும் சேர்த்து 5 மாநிலங்களுக்கான தேர்தல் முடிவுகள் செவ்வாய்க் கிழமையன்று முடிவு அறிவிக்கப்படும். எல்லா இடங்களிலும் எந்திரங்கள் மூலமான வாக்கு பதிவுதான். எதுவும் நடக்கலாம். தேர்தல் முடிவு எப்படியும் இருக்கலாம் என்ற அச்சம் பாஜக தவிர்த்த கட்சிகளிடம் இருந்த போதும், வாக்குச் சீட்டு மூலமான வாக்குப் பதிவுதாம் வேண்டும் என்று யாரும் முயலவில்லை.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,69,994.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.