Show all

பாகிஸ்தானில் வசூலை அள்ளும் 2.0! கிழமை இறுதியில் 300 கோடி ரூபாய் வசூலை குவிக்க வாய்ப்பு

15,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: பிரம்மாண்ட இயக்குநர் சங்கர் இயக்கத்தில், ரஜினி நடிப்பில் வெளியாகியுள்ள 2.0 திரைப்படம் உலகளவில் பெரும் வசூல் சாதனை செய்து வருகிறது. முதல் நாளில் மட்டும் உலகமெங்கும் 120 கோடி ரூபாய் வசூலை குவித்துள்ளது. யாரும் எதிர்பாராத வகையில் பாகிஸ்தானில் 2.0 திரைப்படம் அந்நாட்டு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. முதலில் 25 திரையரங்கில் 2.0 திரைப்படம் வெளியானது. ரசிகர்களின் வரவேற்பை அடுத்து 75 திரையரங்குகளில் தற்போது வெளியிடப் பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் இரண்டே நாளில் 10 கோடி ரூபாய் வசூலையும், அமெரிக்காவில்  12 கோடி ரூபாய் வசூலையும் 2.0 திரைப்படம் குவித்துள்ளது. 2.0 திரைப்படத்திற்கு நல்ல விமர்சனம் கிடைத்துள்ளதால் கிழமை முடிவில் 300 கோடி ரூபாய் வசூலை 2.0 திரைப்படம் குவிக்க வாய்ப்பு உள்ளதாக திரைப்பட வணிக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,69,988.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.