Show all

பத்மஸ்ரீ விருதை, ஷாரூக்கான் திருப்பியளிக்க வேண்டும் என்று சாத்விபிராச்சி கூறியுள்ளார்.

அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களைக் கூறி பரபரப்பை ஏற்படுத்துவதை வாடிக்கையாக கொண்டவர் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் தலைவர்களில் ஒருவரான சாத்வி பிராச்சி.

ஷாருக்கான் தன்னுடைய 50-வது பிறந்த நாளை மும்பையில் கொண்டாடினார்.  அப்போது இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு; இங்கே கருத்து சுதந்திரம் உண்டு.  நாட்டில் சகிப்புத்தன்மை குறைந்து வருவது கவலை அளிக்கிறது.  இந்நிலை தொடருமேயானால், முன்னணி நாடாக இந்தியா உருவாவதற்கு பெரும் தடைக்கற்களாக இருக்கும் என கூறி இருந்தார்.

சகிப்புத்தன்மை குறித்த ஷாரூக்கானின் இவ்வாறான கருத்திற்காக, அவர் மீது தேசதுரோக வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவரை பாகிஸ்தானிற்கு நாடு கடத்த வேண்டும். நடுவண் அரசு  ஷாரூக்கானுக்கு வழங்கியுள்ள பத்மஸ்ரீ விருதை, ஷாரூக் கான் திருப்பியளிக்க வேண்டும் என்று சாத்வி கூறியுள்ளார்

இதே சாத்வி பிராச்சிதான், ஷாருக்கான், சல்மான்கான், அமீர்கான் ஆகியோர் நடித்த படங்களைப் புறக்கணிக்க வேண்டும் என்றும் முன்பு பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.