Show all

உலக ஸ்குவாஷ் தரவரிசையில் தீபிகா பல்லிகல், ஜோஷ்னா முன்னேற்றம்.

ஸ்குவாஷ் போட்டியில் சிறப்பாக விளையாடி வரும் வீரர்களின் இந்த மாதத்திற்கான தர வரிசைப்பட்டியல் ஸ்குவாஷ் சம்மேளணம் வெளியிட்டுள்ளது. இதில் இந்திய வீராங்கனைகயான தீபிகா பல்லிகல் ஐந்து இடங்கள் முன்னேறி 14வது இடத்தை பிடித்துள்ளார். மற்றொரு இந்திய வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா மூன்று இடங்கள் முன்னேறி 17வது இடத்தில் உள்ளார்.அமெரிக்க ஓபன் ஸ்குவாஷ் போட்டியில் தீபிகா கலந்து கொண்டதன் மூலம் தரவரிசையில் முன்னேற்றம் அடைந்துள்ளார்.

அதே போல் கத்தாரில் நடைபெற்ற போட்டியில் உலகின் முதல் நிலை வீராங்கனையான ரானீமை வீழ்த்தியதன் தரவரிசையில் ஜோஸ்னா முன்னேற்றம் கண்டுள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.